த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு!

Bookmark and Share

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு!

அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஜி.வி.பிரகாஷின் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன்.

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ் நடிப்பில் அடல்ட் காமெடியாக வெளியான இப்படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக மாறினாலும் பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பினைப் பெற்றது.

இந்நிலையில் சிம்புவை நாயகனாக வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் தனது அடுத்த படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. சிம்புவிடம் கதையை சொல்லி ஆதிக் ரவிச்சந்திரன் சம்மதம் வாங்கி விட்டதாகவும்,

விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறுகின்றனர். இந்தப் படத்தை முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான பொழுதுபோக்குப் படமாக ஆதிக் ரவிச்சந்திரன் உருவாக்கவிருக்கிறாராம்.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு
பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பிடித்த தமிழ் படம் எது தெரியுமா?
சிம்புவின் அந்த படம் ஓடாதுனு எனக்கு அப்பவே தெரியும் - பிரபல இயக்குனர் பரபரப்பு பேட்டி.!
என் அடுத்த படம் முழுக்க கவர்ச்சி தான் இருக்கும் - என்ன படம்? யார் சொன்னது தெரியுமா?
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
பிரபல இசையமைப்பாளரின் பிறந்தநாளுக்கு சிம்பு போட்ட பிளான்
சிம்புவின் AAA முதல் பாக கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்
சிம்புவின் AAA படத்தில் ஸ்பெஷல் வேடத்தில் பிரபல இயக்குனரின் அப்பா- யார் தெரியுமா?
சிம்பு கூறிய ஐடியாவால் தான் இந்த திடிர் அறிவிப்பு - இயக்குனர் ஆதிக்
சிம்புவின் அஸ்வின் தாத்தா டீஸர் எப்படி- இதோ விமர்சனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions