வழக்குகளை தடை செய்ய கோரிய சிம்பு மனு தள்ளுபடி

Bookmark and Share

 வழக்குகளை தடை செய்ய கோரிய சிம்பு மனு தள்ளுபடி

நடிகர் சிம்பு பாடிய ஆபாச ‘பீப்‘ பாடல் கடந்த மாதம் இணையதளத்தில் வெளியானது. இதற்கு பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டன.

இதைத்தொடர்ந்து, பெண்கள் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிம்பு மீது கோவை, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன. 

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் சிம்பு ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘ஒரு குற்றச்சாட்டுக்கு பல வழக்குகள் பதிவு செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு பல வழக்குகளில் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

ஆபாச பாடல் பாடியதாக என் மீது பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

எனவே, என் மீது வழக்குகள் பதிவு செய்யக்கூடாது என்று அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட டி.ஜி.பி.க்கு உத்தரவிடவேண்டும்‘ என்று கூறியிருந்தார். 

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வக்கீல் சண்முகவேலாயுதம், ‘வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று சுற்றறிக்கை வெளியிட, தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிடவேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.

இவ்வாறு கோரிக்கை வைக்க முடியாது. சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்று டி.ஜி.பி.க்கு இந்த ஐகோர்ட்டு உத்தரவிட முடியாது. ஒருவேளை பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டால், அந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி மனுதாரர் தனித்தனியாக மனு தாக்கல் செய்யலாம். 

இதுபோலத்தான் முன்பு நடிகை குஷ்பு மீது பல வழக்குகள் பதிவானபோது, அந்த வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என்றுதான் அவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது‘ என்று வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘சுற்றறிக்கை வெளியிடவேண்டும் என்று தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட முடியாது. வேண்டுமென்றால் மனுதாரர் தன் மீது பதிவான வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என்று இந்த ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யலாம்‘ என்று கருத்து தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்டு, மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்று சிம்பு தரப்பு வக்கீல் கூறினார். இதையடுத்து, மனுவை திரும்பப்பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Post your comment





Related News
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
விஜயை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சூர்யா, ஆனால்?
ஆளப்போறான் தமிழன் பாடல் பாடகருக்கு திருமணம் முடிந்தது- புகைப்படம் உள்ளே
பீப் சாங்கை தொடர்ந்து மீண்டும் ஒரு பாடலில் சிம்பு, அனிருத் - சூப்பர் தகவல் உள்ளே !
சிம்புவின் TrendSong எப்படி வந்திருக்கிறது தெரியுமா- சிம்புவே சொல்கிறார்
பைரவா எல்லா பாடல் வரிகளும் இதோ!
சிம்பு வாழ்கையில் இன்று மறக்கமுடியாத ஒருநாள் ஏன் தெரியுமா?
கோவை கோர்ட்டில் ஆஜராகுமாறு அனிருத்துக்கு மீண்டும் சம்மன்
பீப் பாடலை பாடியது ஏன்? சிம்பு விளக்கம்!
பீப்பாடல் விவகாரத்தில் என் மீது எந்த தவறும் இல்லை: சிம்பு பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions