அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு

Bookmark and Share

அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு

மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக 3 வருடங்களுக்கு பிசியாகவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

சிம்பு அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. `செக்கச் சிவந்த வானம்' சிம்புவின் 33-வது படமாக உருவாகி இருக்கிறது. சிம்புவின் 34-வது படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்‌‌ஷன்ஸ் தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

இந்த படத்திற்கு பிறகு, அடுத்த படத்தை சிம்புவே எழுதி இயக்கவிருக்கிறாராம். திரில்லர் படமாக உருவாகும் இந்த படம் ஆங்கில மொழியில் உருவாக இருக்கிறது. இந்த படத்திற்கு கவுதம் மேனன் வசனங்களை எழுத இருக்கிறாராம். அதனைத் தொடர்ந்து சிம்புவின் 36-வது படமாக உருவாகும் படத்தை கவுதம்மேனன் இயக்கவிருப்பதாகவும், இந்த படத்தில் 3 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும், அதில் சிம்புவும் ஒருவர் என்றும் கூறப்படுகிறது. 

இந்த படத்தை தொடர்ந்து கலைப்புலி தாணு தயாரிப்பில் ஒரு படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறாராம். இது ரத்தின சிவா இயக்கும் படம் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு சிம்பு பிசியாகிவிட்டாராம். 


Post your comment





Related News
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
இதெல்லாம் போராட்டமா? கருப்பு சட்டையுடன் எதிர்ப்பு தெரிவியுங்கள் - சிம்பு பேச்சால் பரபரப்பு.!
ரஜினி ரசிகர்களை மெர்சலாக்கிய சிம்பு, தெறிக்க விட்ட ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
இந்த செல்ல குட்டிக்காக ஹைதராபாத் பறந்த சிம்பு - இது யார் தெரியுமா?
அதுல நானும் ஒருத்தன், தயாரிப்பாளர் சங்கத்திற்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - நடந்தது என்ன?
சிறந்த மனிதர் என்பதை நிரூபித்த சிம்பு- இதுதான் விஷயம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions