சிம்பு படத்தை உலகம் முழுவதும் பேச வைக்கும் செல்வராகவன்

Bookmark and Share

சிம்பு படத்தை உலகம் முழுவதும் பேச வைக்கும் செல்வராகவன்

செல்வராகவன் தற்போது சிம்புவை வைத்து கான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக டாப்சி, கேத்ரீன் தெரசா ஆகியோர் நடித்து வருகின்றனர். தமிழில் உருவாகும் இப்படத்தை ஸ்பானிஷ், பிரெஞ்ச், போர்ச்சுகீஷ் உள்ளிட்ட சர்வதேச மொழிகளிலும் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செல்வராகவன் கூறும்போது, சிம்பு இயக்கும் படத்தை சர்வதேச அளவில் வெளியிடவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

செல்வராகவனுக்கு நெருங்கிய வட்டாரங்களில் இதுபற்றி விசாரிக்கும்போது, இந்த படத்தை 10 சர்வதேச மொழிகளில் செல்வராகவன் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர். அதில் ஸ்பானிஷ், பிரெஞ்ச், போர்ச்சுகீஷ் ஆகிய மொழிகளும் அடங்குமாம். இதனால், இப்படத்திற்கு சர்வதேச தரம் கிடைக்கும் என்றும் அவர் நம்புவதாக கூறப்படுகிறது. 

கான், சர்வதேச மொழிகளில் உருவாவதற்கும், இப்படத்தின் ஒரிஜினல் படத்திற்கும் ஏதாவதொரு வித்தியாசத்தை ஏற்படுத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அனேகமாக, சர்வதேச மொழிகளில் உருவாகும் படத்தை பாடல்களே இல்லாமல் உருவாக்கப் போவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, இன்னும் முடிவு எடுக்காவிட்டாலும், படம் முடிந்த பிறகு இதுகுறித்து முடிவு செய்வார்கள் என கூறப்படுகிறது. 

‘கான்’ திரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் சிம்பு, முருக பக்தராக வருகிறார். டாப்சி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions