சிம்பு, விஷாலை தாக்கியதற்கு பின்னணியில் நயன்தாரா?

Bookmark and Share

சிம்பு, விஷாலை தாக்கியதற்கு பின்னணியில் நயன்தாரா?

விஷால் நடிகர் சங்கத் தேர்தலில் நிற்பதே சரத்குமார் உடனான பெர்சனல் பகைகாக தான் என்று சிம்பு கூறினார். சிம்புவிற்கு விஷால் மீதிருந்த பர்சனல் பகைகாக தான் இப்படி திட்டி தீர்த்து விட்டார் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.

சத்யம் படத்தில் விஷாலுடன் நயன்தாரா நடித்த போதே ஆரம்பித்து விட்டதாம் இந்த பகை. நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த பார்ட்டியில் பங்கேற்ற சிம்பு, நயன்தாரா-விஷால் ஜோடியைப் பார்த்து கண் சிவந்து வெளியேறினாராம். அடுத்த நாளே நட்சத்திர கிரிக்கெட் அணியில் இருந்தும் வெளியேறிவிட்டாராம்.

ஆனால் பிரஸ்மீட்டில் கிரிக்கெட் டீமில் இருந்து வெளியேறியதற்கு வேறு காரணம் சொன்னார். இந்த பகைதான் இதுநாள் வரைக்கும் தீராத பகையாக நீடித்து வருகிறதாம். அதனால் தான் ”நீ யார் என் குடும்பத்தை பிரிப்பதற்கு” என்று கேட்கும் அளவிற்கு வந்திருக்கிறது என்கின்றனர். இதே சிசிஎல் பிரச்சினையில் தான் சரத்குமாருக்கும் விஷாலுக்கும் இடையே மோதல் ஏற்பட காரணம் என்கின்றனர்.

அதே நேரத்தில் விஷால் ரெட்டி என்று ராதிகா சொன்னதற்கு பதிலளித்த விஷால், ”எனக்கு ராதிகா மேடம் மேல தனிப்பட்ட கோபம் இல்லீங்க. என்னைபோயி ‘விஷால் ரெட்டி’ என்று ராதிகா சொல்லி இருக்கார். நல்லது செய்யறதுக்கு சாதி, மதம்’னு எந்த அடையாளமும் தேவை கிடையாதுங்க. நடிகர் சங்கத்துல சாதி என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் ”முதலில் ராதிகா மேடத்துக்கு ஒரு உண்மை தெரியணும். நம்ம நடிகர் சங்கத்தோட உண்மையான பெயர் ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’. அதிலேயே எல்லாம் அடங்கி இருக்குன்னு எல்லோருக்கும் தெளிவா தெரியும்.

அடுத்ததாக என்னை வாடா போடா என்று பேசிய அந்த தம்பி சிம்புவுக்கு என்மேல் என்ன கோபமோ? அவர் பாட்டுக்கு இஷ்டத்துக்கு என்னைப்பத்தி ஏசினார். சாதாரணமா வெற்றிபெற இருந்த எங்க அணியை மாபெரும் வெற்றிபெற உதவின மேடம் ராதிகா, தம்பி சிம்புவோட ஏச்சுப் பேச்சுக்கு ரொம்ப நன்றி” என்று சொல்லிவிட்டு பிரச்சாரத்திற்கு கிளம்பிவிட்டாராம், விஷால்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions