சிம்பு படத்தில் நடிக்கும் பிரபல காமெடி நடிகர் !

Bookmark and Share

சிம்பு படத்தில் நடிக்கும் பிரபல காமெடி நடிகர் !

‘நான் கடவுள்’ படத்தின் மூலம் இயக்குனர் பாலாவால் வில்லனமாக அறிமுகமானவர்தான் மொட்டை ராஜேந்திரன். அதன்பிறகு, ஒருசில படங்களில் வில்லன்களுக்கு அடியாளாக நடித்து வந்தவரை, அட்லி தனது ‘ராஜாராணி’ படத்தின் மூலம் காமெடியனாக்கிவிட்டார்.

அந்த படத்திலிருந்து தற்போது வரை அவரை வில்லனாக ஒப்பந்தம் செய்பவர்களைவிட, காமெடியனாக ஒப்பந்தம் செய்பவர்கள்தான் அதிகம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே இவருடைய காமெடிக்காகவே ஓடியது என்றால் அது மிகையாகாது. 

அஜித், விஜய் என முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்த மொட்டை ராஜேந்திரன் தற்போது சிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். சிம்பு நடிக்கும் படத்தில் மொட்டை ராஜேந்திரன் நடிப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. 

மேலும், இப்படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனின் அண்ணன் மாரி மணி என்பவரும் இப்படத்தில் அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில், சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார். ஏற்கெனவே, மஹத், ஸ்ரேயா ஆகியோரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். 


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions