பீப் பாடல் சர்ச்சை: டிச.19ல் சிம்பு நேரில் ஆஜராக கோவை போலீஸ் சம்மன்

Bookmark and Share

பீப் பாடல் சர்ச்சை: டிச.19ல் சிம்பு நேரில் ஆஜராக கோவை போலீஸ் சம்மன்

பெண்களைப் பற்றி ஆபாசமாக பாடி இணையத்தில் பதிவேற்றிய 'பீப்' பாடல் விவகாரம் தொடர்பாக, வரும் 19 ம் தேதி கோவை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் சிம்புவுக்கு கோவை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சிம்பு தலைமறைவானதை அடுத்து அவரது தந்தை டி.ராஜேந்தரிடம் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு எழுதி, பாடியதாக கூறப்படும் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ள பாடல் ஒன்று, பீப் சாங் என்ற பெயரில் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்தப் பாடலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இருவரையும் கைது செய்யக் கோரியும் கோவை, தூத்துக்குடி,கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் மாதர் சங்கத்தினர் போரட்டங்களும் நடத்தினர்.

இந்நிலையில் நடிகர் சிம்பு, அனிருத் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் கொடுக்க, உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார் காவல் ஆணையர் அமல்ராஜ்.

இதையடுத்து சிம்பு, அனிருத் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நடிகர் சிம்புவுக்கு கோவை போலீசார் சம்மன் விநி யோகித்துள்ளனர்.

வரும் 19ம் தேதி காலை கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்திட வேண்டும் என அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மனை விநியோகிக்க கோவை போலீசார், சென்னையில் உள்ள சிம்புவின் வீட்டுக்கு இன்று காலை சென்றனர்.

கைது பயம் காரணமாக சிம்பு வீட்டில் இல்லை. எங்கோ ஓடி ஒளிந்து தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரிடம் சம்மனை போலீசார் அளித்தனர். அதன் படி வரும் 19ம் தேதி சிம்பு நேரில் ஆஜராகி விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
இதெல்லாம் போராட்டமா? கருப்பு சட்டையுடன் எதிர்ப்பு தெரிவியுங்கள் - சிம்பு பேச்சால் பரபரப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions