சிம்பு ரசிகர்களுக்கு ஆறுதல் செய்தி

Bookmark and Share

சிம்பு ரசிகர்களுக்கு ஆறுதல் செய்தி

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘வாலு’ படம் நீண்ட இழுபறிக்குப் பிறகு ஜூலை 17ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மேஜிக் ரேஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கால் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது.

‘வாலு’ படம் வரும் என்று சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், இப்படம் சொன்ன தேதியில் வராது என்பது மட்டும் உறுதியாகிவிட்டதால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். 

இந்நிலையில், சிம்புவின் ரசிகர்கள் உற்சாகமடையும் விதமாக புதிய செய்தி ஒன்று வந்துள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 

தற்போது படத்தின் எடிட்டிங் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

‘வாலு’ படம் வருகிறதோ, இல்லையோ, இன்னும் சில மாதங்களில் கண்டிப்பாக ‘அச்சம் என்பது மடமையடா’ வந்துவிடும் என்பது உறுதி.


Post your comment





Related News
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
இதெல்லாம் போராட்டமா? கருப்பு சட்டையுடன் எதிர்ப்பு தெரிவியுங்கள் - சிம்பு பேச்சால் பரபரப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions