மன்னிப்பேன், ஆனால் மறக்க மாட்டேன் - சிம்பு அதிரடி

Bookmark and Share

மன்னிப்பேன், ஆனால் மறக்க மாட்டேன் - சிம்பு அதிரடி

போடா போடி படத்திற்குப் பிறகு சிம்பு நடித்து கடந்த மூன்று வருடங்களாக எந்தப் படமும் வெளிவரவில்லை. தட்டுத் தடுமாறி முடிவுக்கு வந்த வாலு படம் நாளை மறுநாள் ஜுலை 17ம் தேதியன்று வெளியாகும் என்று கடந்த மாதமே அறிவிக்கப்பட்டது.

ஆனால், படத்தின் வெளியீட்டு உரிமை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நேற்று நீதிமன்றம் பட வெளியீட்டிற்கான தடையை விதித்தது. இதையடுத்து  வாலு படம் வெளிவருவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரமே பத்திரிகையாளர்களை அழைத்து டி.ராஜேந்தர்,  வாலு படத்தை வெளிவராமல் தடுக்க சிலர் சதி செய்வதாக குற்றம் சாட்டினார். அதையடுத்து சிம்புவும் தன் அப்பாவின் கருத்தை ஆமோதித்தார். இருந்தாலும் அந்த சதிகாரர்கள் யார் என்பதை டிஆரும், சிம்புவும் இதுவரை வெளியிடவில்லை.

இதனிடையே இன்று காலை தன்னுடைய டுவிட்டரில், “நான் இப்போது எதைச் சொன்னாலும் அதை சரியாகவோ, தப்பாகவோ எடுத்துக் கொள்வார்கள்.

ஆனாலும், ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன், நான் மன்னித்து விடுவேன், ஆனால் மறக்க மாட்டேன்,” என யாருக்கோ புரிவது போல ஒரு பதிவைப் போட்டிருக்கிறார்.

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய சரத்குமாருக்கு சிம்பு பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல, படத்தின் தடையைப் பற்றிக் கேள்விப்பட்டதும் தனுஷும் சிம்புவிடம் பேசினேன், அவர் தைரியமாக இருக்கிறார் என சொல்லியிருந்தார். தனுஷ் நடிக்கும் 39 மாரி படத்தை சரத்குமார்தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரி படமும் வாலு படமும்தான் ஒரே நாளில் வெளிவருவதாக இருந்தது. தற்போது வாலு வராத நிலையில் மாரி மட்டுமே தனியாக வருகிறது.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions