சிம்பு கோவை போலீசில் 24-ந் தேதிக்குள் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

Bookmark and Share

சிம்பு கோவை போலீசில் 24-ந் தேதிக்குள் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் சிம்பு பாடிய ஆபாச பாடல்கள் கடந்த டிசம்பர் மாதம் இணையதளத்தில் வெளியானது. இதையடுத்து கோவை மாவட்டம், ரேஸ்கோர்ஸ் போலீசாரும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் தனித்தனியாக நடிகர் சிம்பு மீது வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் சிம்பு மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணையின்போது, அவர் மீது பதிவான வழக்குகளில் உள்ள சட்டப்பிரிவுகள் அனைத்தும் ஜாமீனில் வெளிவரக்கூடியது என்பது தெரியவந்தது.

இதையடுத்து ஜனவரி 29-ந் தேதிக்குள் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு சிம்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கடந்த ஜனவரி 5-ந் தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து நடிகர் சிம்பு 2 மனுக்களை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். 

ஒரு மனுவில், ‘கோவை மாவட்டம், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

மற்றொரு மனுவில், கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் முன்பு ஆஜராக காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். 
இந்த மனுக்களை நீதிபதி கே.கல்யாணசுந்தரம் விசாரித்து, நேற்று தீர்ப்பளித்தார். 

அதில், ‘மனுதாரர் சிம்பு 24-ந் தேதிக்குள் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும். பின்னர், அதுதொடர்பான அறிக்கையை 25-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.

அதுவரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், மனுதாரர் சிம்பு மீது பதிவு செய்த வழக்கை விசாரிக்கக் கூடாது’ என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions