ரசிகர் தற்கொலை முயற்சி? - அழும் சிம்பு...!

Bookmark and Share

ரசிகர் தற்கொலை முயற்சி? - அழும் சிம்பு...!

சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்த வாலு திரைப்படம் நாளை வருவதாக இருந்தது. ஆனால், படத்தின் தயாரிப்பாளருக்கும், படத்தின் உரிமையை வாங்கியவருக்கும் இடையே எழுந்த பணப்பிரச்னையில் உரிமை வாங்கியவர் வழக்கு தொடர்ந்ததால் நீதிமன்றம் படத்தின் வெளியீட்டுக்கு தடை விதித்தது. இதனால் வாலு படத்தின் வெளியீடு மீண்டும் நீண்டு போக ஆரம்பித்துவிட்டது.

இதனிடையே,  வாலு படம் வெளிவராத காரணத்தால் சிம்புவின் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாக சிம்புவே அவருடைய டுவிட்டரில் டுவீட் செய்துள்ளார்.

சிம்புவின் டுவீட்டை நேற்று பார்த்ததும் மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது. ஒரு படம் வெளிவராததற்கு அப்படி எந்த ரசிகர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார், இப்படியெல்லாம் கூடவா ரசிகர்கள் இருப்பார்கள், அவர்களின் மடத்தனமான செயலுக்கு அளவே இல்லையா என்று யோசிக்க வைத்தது.

இதுகுறித்து சிம்பு டுவீட் செய்துள்ளதாவது, ““ரசிகர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்தார் என்ற தகவல் அறிந்து என்னுடைய இதயமே உடைந்து போய்விட்டது. அதனால் நான் இப்போது அழுது கொண்டிருக்கிறேன். ரசிகர்களே, தயவு செய்து வலிமையாக இருங்கள். உங்களை என்றும் விழ வைத்து விடமாட்டேன்.

நான் ஏற்கெனவே உடைந்து போயிருக்கிறேன், மன வலிமையுடன் இருக்க முயன்று வருகிறேன். இந்த சமயத்தில் இது மாதிரியெல்லாம் செய்யாதீர்கள். உங்கள் அன்பை விட எனக்கு எதுவும் பெரிதல்ல,” என கூறியிருக்கிறார்.


Post your comment





Related News
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
இதெல்லாம் போராட்டமா? கருப்பு சட்டையுடன் எதிர்ப்பு தெரிவியுங்கள் - சிம்பு பேச்சால் பரபரப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions