சிம்பு பாடலுக்கு கண்டனம் தெரிவித்து கவிஞர்கள் கூட்டறிக்கை

Bookmark and Share

சிம்பு பாடலுக்கு கண்டனம் தெரிவித்து கவிஞர்கள் கூட்டறிக்கை

சிம்பு பாடியதாக வெளிவந்துள்ள ‘பீப் சாங்’ பிரச்சினை இப்போது உச்சக்கட்டத்தில் இருக்கிறது. சிம்பு எதிராக மாதர்கள் சங்கத்தினரும், மாணவர்களும் போர்க் கொடி தூக்கி வருகின்றனர். சினிமா பிரபலங்கள் சிலரும் சிம்புவுக்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கவிஞர்கள் புலமைப்பித்தன், முத்துலிங்கம், சினேகன், யுகபாரதி, பா.விஜய் உள்ளிட்ட கவிஞர்கள் ஒன்றாக இணைந்து சிம்புவுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், தமிழ்த் திரைப்படத் துறை என்ற மிகப்பெரிய ஊடகத்தில் இருந்து வெளியாகும் படைப்புகளை பெரிதும் ரசிக்கும் ரசிகர்கள் கோடிக் கணக்கான பேர். வெகுஜனங்கள் மத்தியில் விரைந்து சேர்ந்து அனைவர் இல்லங்களையும் உள்ளங்களையும் அடைந்து விடும் இப்படைப்புகள் ஒரு சமூக அக்கறையோடும் பொறுப்போடும் இருக்க வேண்டும்.

அந்த எல்லை மீறப்படும்போது அது பலர் மனதை புண்படுத்துவதாக அமைந்து விடுகிறது. குறிப்பாக, இந்தச் சர்ச்சைக்குரிய பாடல் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கிலும் ஒழுக்கமற்றவர்களின் ஓலக்குரலாகவும் ஒலிக்கிறது.

மக்கள் இன்றும் மழைப் பாதிப்பில் இருந்து மீளாத சூழ்நிலையில் அவர்களின் மனநிலை புரியாமல் பொறுப்பற்ற வன்செயலாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட பாடல் சிறு பிள்ளைகள் மத்தியில் பரவி விட்டால் ஒரு நாகரீகம் இழந்த தொற்று நோய் அவர்கள் மனதில் பதிந்துவிடும். குறிப்பிட்ட பீப் சத்தம் ஏன் என்று கேட்டு மன அசுத்தம் அடைவார்கள்.
இப்பாடல் குறித்து மாணவர் அமைப்புகள், மாதர் சங்கங்கள், பல எழுத்தாளர்கள் தங்கள் எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், இந்தக் கூட்டறிக்கை வாயிலாக எங்களது கண்டனத்தையும் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம்.

மக்களால் அங்கீகரிக்கப்பட்டு மிக பிரபலமாக இருக்கும் படைப்பாளிகள் - கலைஞர்கள் இப்பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும். ஒருவேளை சிலம்பரசன், அனிருத் தரப்பில் கூறப்பட்டதுபோல் அந்தச் சர்ச்சைக்குரிய பாடல் அவர்களது படைப்பாக இல்லாது இருக்குமாயின் இந்த கொடும் செயலை செய்தவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோல் சமூகத்தைச் சீரழிக்கும் பாட்டுக்கள் படைப்புக்கள் வெளிவராது செய்ய அனைத்து படைப்பாளிகளும், ஊடகங்களும் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Post your comment

Related News
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions