அதுல நானும் ஒருத்தன், தயாரிப்பாளர் சங்கத்திற்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - நடந்தது என்ன?

Bookmark and Share

அதுல நானும் ஒருத்தன், தயாரிப்பாளர் சங்கத்திற்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - நடந்தது என்ன?

தமிழ் திரையுலகில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை, படப்பிடிப்புகள் நடைபெற்து என அதிரடியாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நடந்து வரும் ஸ்ட்ரைக்கில் நேற்று தயாரிப்பாளர் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய கூட்டத்தில் சிம்பு கலந்து கொண்டது திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

மேலும் இந்த கூட்டத்தில் பல தயாரிப்பாளர்கள் ஹீரோக்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும். அப்போது தான் படத்தின் பட்ஜெட் குறையும் என கூறி இருந்தனர், இதனை அடுத்து பேசிய சிம்பு தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் என இருப்பது 10 நடிகர்கள் தான். அதில் நானும் ஒருவராக இருப்பது மகிழ்ச்சி.

ஹீரோக்களின் சம்பளத்தை ஏன் குறைக்க வேண்டும்? கருப்பு பணத்தில் படத்தை எடுப்பதை நிறுத்துங்கள். முறையாக வரி கட்டி வெள்ளை பணத்தில் படம் எடுங்கள் என ஆவேசமாக பேசியுள்ளார். இவருடைய பேச்சை விஷால் மற்றும் பலர் பாராட்டினாலும் சில தயாரிப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions