வெள்ளத்தின் போது முஸ்லிம் சோறு போட்டாங்களே..அது தேச விரோதமா? - சிம்பு சுளீர் கேள்வி

Bookmark and Share

வெள்ளத்தின் போது முஸ்லிம் சோறு போட்டாங்களே..அது தேச விரோதமா? - சிம்பு சுளீர் கேள்வி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை தேச விரோதிகள் என சித்தரிப்பதற்கு நடிகர் சிம்பு கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது இஸ்லாமியர்கள் செய்த உதவியும் தேச விரோதமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் திடீரெனதடியடி நடத்தி கலைத்தனர். இதனால் சென்னையில் கலவரம் ஏற்பட்டது. இதில் ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். காவல்துறையின் இந்த அடாவடிக்கு அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில் நடிகர் சிம்பு சென்னைல் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை தேச விரோதிகளாக சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது.சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஏராளமான இஸ்லாமியர்கள் உணவு வழங்கினர்.

வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களுக்கு உதவி செய்தனர். அதுவும் தேச துரோகமாக?மாணவர்கள் தானாகவே போராடினர். யாரும் தலைவர்கள் கிடையாது. ஒற்றுமையாக திரண்டு மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராடினர்.

போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி கொண்டாடப்பட வேண்டியிருக்க ஒன்று.காவல்துறை அவகாசம் வழங்கியிருந்தால் அசம்பாவிதம் நடந்திருக்காது. சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அரசு பிரதிநிதிகள் யாராவது விளக்கியிருக்கலாம்.

சட்டத்தைப்பற்றி விளக்கி கூறியிருந்தால் வன்முறை ஏற்பட்டிருக்காது.மாணவர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டார்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஜல்லிக்கட்டுக்கான வெற்றியை கொண்டாடாமல் போனது வேதனையளிக்கிறது. இவ்வாறு நடிகர் சிம்பு செய்தியாளர்களிடம் பேசினார்.


Post your comment





Related News
சர்ச்சைகளின் நாயகன் சிம்பு அனிருத்துடன் பிறந்தநாள் கொண்டாட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நூதன போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த சிம்பு
மீண்டும் சிம்பு பாடலில் சர்ச்சையான வரிகள்
சிம்பு ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி
திண்டுக்கல்லில் பிஸியாக உருவாகும் AAA படப்பிடிப்பு!
சிம்பு படத்தில் நடிக்கும் பிரபல காமெடி நடிகர் !
மூன்று கெட்டப்புகளில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சிம்புவின் புதிய கெட்டப் வெளியானது!
சிம்பு ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி செய்தி!
ஜூன் 17-ல் சிம்பு ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் விருந்து!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions