என்னுடைய பலம் ரசிகர்கள் தான் - சிம்பு

Bookmark and Share

என்னுடைய பலம் ரசிகர்கள் தான் - சிம்பு

டுவிட்டரில் நடிகர் சிம்பு, “ரசிகர்கள்தான் என்னுடைய பலமே, அவர்கள் இல்லாமல் நான் இல்லை”,  என்று குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர்.ரகுமானை தொந்தரவு செய்த சம்பவத்தைப் பற்றி சிம்பு இப்போதுதான் வாயைத் திறந்திருக்கிறார்.

இப்போது அவர்  அப்படி செய்யவில்லை, சிறுவனாக இருக்கும் போது செய்துள்ளாராம்.  ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பாளராவதற்கு முன்பு இளையராஜா, டி.ராஜேந்தர் ஆகியோரிடம் கீபோர்டு வாசிப்பாளராக இருந்துள்ளார்.

அப்போது டி.ஆர் இசையமைக்கும் படங்களுக்காக வேலை பார்க்க வரும் ரகுமானைத்தான் சிம்பு தொந்தரவு செய்வாராம். அது எப்படிப்பட்ட தொந்தரவு என்பதை சிம்பு தெரிவிக்கவில்லை. விண்ணைத் தாண்டி வருவாயா வெற்றிக்குப் பிறகு கௌதம் மேனன், ஏ.ஆர்.ரகுமான், சிம்பு கூட்டணி மீண்டும் இணைந்துள்ள அச்சம் என்பது மடமையடா படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.

அது சம்பந்தமான ஒரு டிவிட்டர் பதிவில்தான் சிம்பு ரகுமானைத் தொந்தரவு செய்த விஷயத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.  அச்சம் என்பது மடமையடா டீசருக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்துள்ள சிம்பு,  “தற்போதுதான் என்னுடைய ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்”,  என்றும் தெரிவித்துள்ளார்.

“வாலுவைத் தொடர்ந்து இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா, கான் என நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன.

இதைவிட வேறென்ன வேண்டும், நன்றி கடவுளே. கௌதம் மேனனுக்கு ஸ்பெஷல் நன்றி. எப்போதும் என்னை நம்புபவர், மேலும் நன்றாக நடிப்பதற்கு எனக்கு சுதந்திரத்தையும் கொடுப்பவர்.

ஏ.ஆர். ரகுமான் எப்போதும் நல்ல பாடல்களையே கொடுப்பார். ரசிகர்கள்தான் என்னுடைய பலமே, அவர்கள் இல்லாமல் நான் இல்லை,” என்று அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார் சிம்பு. 


Post your comment





Related News
எனக்கு காதலா? நடிகை மஞ்சிமா மோகன் கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்
சிம்பு ரசிகர்களுக்கு AAA மட்டுமில்லை, மற்றொரு ட்ரீட்டும் காத்திருக்கிறது!
முதல் வருட கொண்டாட்டத்தில் தள்ளிபோகாதே! ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
கொடியின் வசூலை ஒரே வாரத்தில் தாண்டிய AYM!
அச்சம் என்பது மடமையடா படத்துக்கு வந்த புது சிக்கல்!
சிம்பு படத்திற்கு யு சான்றிதழ்
அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி முடிவானது!
அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் எப்போது?
ரிலீஸுக்கு தயாராகும் அச்சம் என்பது மடமையடா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions