சிம்பு நயன் மீது புகார்!

Bookmark and Share

சிம்பு நயன் மீது புகார்!

டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் சிம்பு, நயன்தாரா நடித்து வரும் இது நம்ம ஆளு படத்தை பாண்டிராஜ்  ஏற்கெனவே இயக்கி வந்தார். திட்டமிட்டபடி படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இதனால் இயக்குநர் அப்படத்தை அப்படியே விட்டுவிட்டு பசங்க 2 என்ற படத்தை எடுத்து முடித்துவிட்டார்.

தற்போது விஷால் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். மீண்டும் படத்தை இயக்குமாறு பாண்டியராஜிடம் கேட்டதற்கு அவர் மறுத்து பின்பு ஒப்புக் கொண்டார். ஒரு பாடல் காடசியும், 3 வசன காட்சியும் மட்டுமே படமாக்கப்பட வேண்டியது இருக்கிறது.  நயன்தாராவிடம் படத்தில் நடிக்க கேட்டதற்கு மறுத்துவிட்டார்.

இதுகுறித்து சிம்பு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளார். நடிகர் சங்கம் இதுகுறித்து நயன்தாராவிடம் விளக்கம் கேட்டதற்கு "நான் கொடுத்த தேதிகளை வீணாக்கி விட்டார்கள்.

நான் இப்போது வேறு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இனி அந்தப் படத்தில் நடிக்க முடியாது. முடிந்தால் என்னுடைய சம்பள பாக்கியை வாங்கிக் கொடுங்கள்" என்று கூறிவிட்டராம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions