ஒரே நாளில் பட்டயை கிளப்ப களம் இறங்கும் விஜய், சூர்யா, சிம்பு?

Bookmark and Share

ஒரே நாளில் பட்டயை கிளப்ப களம் இறங்கும் விஜய், சூர்யா, சிம்பு?

இந்த வருடம் பொங்கல் விருந்தாக ‘கதகளி,’ ‘தாரை தப்பட்டை,’ ‘ரஜினிமுருகன்,’ ‘கெத்து’ ஆகிய 4 புதிய படங்கள் திரைக்கு வருகின்றன. இதற்கடுத்து ஏப்ரல் மாதத்தில் வருகிற தமிழ்ப்புத்தாண்டு எனப்படுகிற சித்திரை முதல்நாளிலும் மூன்று பெரியபடங்கள் வரவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் 24 படம் அதன் பின்னர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தெறி படம் ஏப்ரலில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.

இப்போது கௌதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படமும் ஏப்ரலில் வெனியாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இம்மூன்று படங்களுமே ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுகிற படங்கள். இம்மூன்றும் ஒரேநாளில் வெளியானால் கடும்போட்டி இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions