தல, தம்பி சூர்யா, தம்பி சிம்பு - காமெடி பண்ணும் பவர்ஸ்டார்

Bookmark and Share

தல, தம்பி சூர்யா, தம்பி சிம்பு - காமெடி பண்ணும் பவர்ஸ்டார்

காமெடி நடிகராக இருந்தால் திரைப்படத்தில் மட்டும்தான் காமெடி செய்ய வேண்டும் என்றில்லை,  நிஜத்திலும் காமெடி செய்யலாம். அப்படி ஒரு காமெடியைத்தான் பவர்ஸ்டார் தற்போது பண்ணிக் கொண்டிருக்கிறார்.

சீனிவாசன் என்கிற அவருடைய பெயரைச் சொன்னால் எத்தனை பேருக்குத் தெரியுமோ, 'சூப்பர்ஸ்டார்' மாதிரி இந்த 'பவர்ஸ்டார்' ங்கற அடைமொழியை சொல்ல வைக்கிறதுக்காக யாருக்கு என்ன தண்டனை கொடுக்கிறதோ...டிவிட்டரில் நடுவில் காணாமல் போயிருந்த இந்த பவர்ஸ்டார் மீண்டும் வந்து பயங்கரமான காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார். சூர்யா டிவிட்டரில் வந்ததைத் தொடர்ந்து அவரை வரவேற்கும் விதமாக இவர் என்ன சொன்னார் தெரியுமா ?.

“ஹாய், பிதர் சூர்யா, டிவிட்டருக்கு உங்களை வரவேற்கிறேன். உங்களை நான் ஃபாலோ செய்வேன் என்று எதிர்பார்க்காதீர்கள், நான் அதை செய்ய மாட்டேன்,” என்று டிவீட் செய்திருக்கிறார்.

அதோடு விட்டாரா, சில மணி நேரங்களுக்கு முன் “தம்பி சிம்பு, 'வாலு' ன்னு வச்சதுனாலதான உன் படம் ரிலீஸ் ஆகலை போல, பேசாம 'தல' ன்னு பேரு வச்சி ரிலீஸ் பண்ணுங்க, கண்டிப்பா ஹிட் ஆகும்,” என ஒரு பதிவைப் போட்டிருக்கிறார். இது கூட பரவாயில்லை.

ஆனால், அடுத்து அவர் ஒரு டிவீட் போட்டிருக்கிறார் பாருங்கள், அதற்கு அவருக்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்.“இரண்டு இளம் ஹீரோக்கள், சிம்பு, பவர் ஸ்டார், அவர்களது படங்களை வெளியிட முயற்சித்து வருகிறார்கள். ஆனால், சில தீய சக்திகள் அதைத் தடுக்கின்றன,” என பதிவிட்டிருக்கிறார்.என்னம்மா பவரு, இப்படி பத்த வைக்கிறீயேம்மா...!


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions