சிம்புவின் மறுபெயர் தாமதம்!

Bookmark and Share

சிம்புவின் மறுபெயர் தாமதம்!

இரண்டு நாட்களுக்கு முன்பு வாலு  படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டது. அப்போதே சிம்பு வந்து பத்திரிகையாளர்களைச் சந்திப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அன்று சிம்பு வரவில்லை.

மீண்டும் அதற்காகவே நேற்று வாலு படத்தின் சக்சஸ் மீட் என பத்திரிகையாளர்களைச் சந்திப்பை படத்தை வாங்கி வெளியிட்ட சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் ஏற்பாடு செய்தார். மாலை 6.30 மணிக்கு நிகழ்ச்சி என சொல்லப்பட்டது. அப்போது முதலில் வந்தது டி.ஆர் மட்டுமே.  

அவர் தனித் தனியாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து வாலு படத்திற்கு ஆதரவு கொடுத்ததற்கும் தனக்குத் தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கும் நன்றி என கைகுலுக்கி விட்டுச் சென்றார்.

இன்னும் சிறிது நேரத்தில் சிம்பு வந்து விடுவார் என டி.ஆர் சொல்லி,  ஒன்றரை மணி நேரத்தைக் கடந்தது. சந்திப்பு நடந்த இடத்திற்கும் சிம்புவின் வீட்டிற்குமான தூரம் குறைவே. பத்திரிகையாளர்கள் பலர்கிளம்பலாம் என்று நினைக்கும்போது சிம்பு நுழைந்தார். தாமதத்திற்கான காரணம் எதையும் சொல்லாமல் நிகழ்ச்சியை ஆரம்பித்ததோடு டி.ஆர் பேசியதுதான் மிகவும் ஹைலைட்டானது.  

பத்திரிகையாளர்கள் பலருடன் தனக்கு நெருக்கமான நட்புஉண்டு என்றும் அவர்கள் ஒவ்வொருவரையும் தனித் தனியாக ஞாபகப்படுத்தி பெயர் சொல்லி பேசும் அளவிற்கு இன்றும் பழகி வருவதாகவும் கூறியதோடில்லாமல் தன் மகன் சிம்பு, பத்திரிகையாளர்களிடமிருந்து விலகியே இருக்கிறார் என்றும் அவரை பத்திரிகையாளர்களுடன் நெருங்கிப் பழக வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.  

இனியாவது, சிம்பு அப்பாவின் பேச்சைத் தப்பாமல் கேட்டு பத்திரிகையாளர்களுடன் நெருகக்மாகப் பழகுவார் என நம்புவோம்.  

 


Post your comment





Related News
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
திரிஷாவுடன் காதலா? - உண்மையை போட்டுடைத்த சிம்பு.!
புது தயாரிப்பாளரை ஆச்சர்யப்பட வைத்த சிம்பு..!
சிம்புவின் பீப் பாடலை வெளியிட்டது இவர் தான் - டி.ஆர்.பரபரப்பு பேச்சு.!
விண்ணை தாண்டி வருவாயா கதை இவருக்காக உருவானது தான் - கவுதம் மேனன் வெளியிட்ட ரகசியம்.!
சிம்பு, திரிஷாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்
ஆமாங்க, நான் தான் லூசுப்பயன், பிரபல நடிகையிடம் சிம்பு கலாட்டா
தல ரசிகர் என நிருபித்த சிம்பு ! என்ன செய்தார் தெரியுமா
மகன் சிம்பு திரையில் தாத்தா... டிஆர் நிஜத்தில் ஆனார் தாத்தா!
ஜல்லிக்கட்டுக்கு திரிஷா எதிர்ப்பா? சிம்பு விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions