சிம்பு படப்பிடிப்பில் தமன்னா இணைவது எப்போது?

Bookmark and Share

சிம்பு படப்பிடிப்பில் தமன்னா இணைவது எப்போது?

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வருகிறார்.

அவருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இதில் முதலாவது ஹீரோயினாக ஸ்ரேயா ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார். அவரை தொடர்ந்து தற்போது தமன்னாவும் இப்படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார்.

சென்னையை சேர்ந்த மாடர்ன் பெண்ணாக இவர் இப்படத்தில் நிகழ்கால சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறார். சிம்பு ஜோடியாக தமன்னா நடிப்பது இதுவே முதல்முறை. இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 19-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

இதில் தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions