இமான் சிம்புவை தொடர்ந்து தேவாவை பிடித்த தமன்

Bookmark and Share

இமான் சிம்புவை தொடர்ந்து தேவாவை பிடித்த தமன்

தமன் தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதில் ஜெயம் ரவி நடித்து வரும் ‘அப்பாடக்கர்’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இப்படத்திற்காக தமன் பிரபலமான குரல்களை தேர்ந்தெடுத்து பாட வைத்து வருகிறார். முதலில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் இமானை ஒரு பாடலுக்கு பாட வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து ‘குத்து சாங் மா நீ... ஹிட்டு சாங் மா நீ...’ என தொடங்கும் குத்துப்பாடலை பாட வைத்துள்ளார். தற்போது கானா பாடலுக்கு பெயர் போன தேவாவை வைத்து ஒரு பாடலை பாட வைத்துள்ளார். இப்பாடல் ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பாடக்கர் படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். இதில் ஜெயம் ரவி நாயகனாகவும் திரிஷா, அஞ்சலி நாயகிகளாகவும் நடித்து வருகிறார்கள். மேலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாடல்கள் வெளியீட்டு விழா இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions