சிம்பு படத்திலிருந்து த்ரிஷா விலகல்... உண்மைக் காரணம் என்ன?

Bookmark and Share

சிம்பு படத்திலிருந்து த்ரிஷா விலகல்... உண்மைக் காரணம் என்ன?

சிம்பு - த்ரிஷாவை வைத்து செல்வராகவன் இயக்க திட்டமிட்டிருந்த புதிய படத்திலிருந்து விலகிவிட்டார் த்ரிஷா.

இருவரையும் வைத்து சமீபத்தில் ஃபோட்டோசெஷன் நடத்தினார் செல்வராகவன். கமல் நடிக்கும் படம் மற்றும் சுந்தர்.சி இயக்கும் படத்தில் த்ரிஷா நடிக்க ஒப்புக்கொண்டதால் அவரது கால்ஷீட் க்ளாஸ் ஆனதாக சிம்பு மற்றும் செல்வராகவன் தரப்பில் சொல்லப்பட்டது.

தற்போது த்ரிஷாவுக்கு பதிலாக மெட்ராஸ் படநாயகி கேத்ரின் தெரசாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டார்.

ஆனாலும் த்ரிஷா விலகலுக்குப் பின்னால் ஏதோ ஒரு காரணம் மறைந்திருப்பதாகத் தோன்றியது.

த்ரிஷாவுக்கு நெருக்கமான தரப்பில் விசாரித்தபோது, செல்வராகவன் படத்திலிருந்து த்ரிஷா விலகியதற்கான உண்மைக் காரணம் தெரிய வந்தது.

சிம்பு - செல்வராகவன் இருவரும் தொடர்ந்த தோல்விப்படங்களைக் கொடுத்தவர்கள். எனவே அவர்கள் இணையும் படத்துக்கு இதுவரை தயாரிப்பாளர் கிடைக்கவில்லையாம்! 

தயாரிப்பாளரை இம்ப்ரஸ் பண்ணுவதற்காகவே சிம்பு - செல்வராகவன் இருவரும் திட்டமிட்டு போட்டோசெஷன் நடத்தி உள்ளனர். தயாரிப்பாளர் கிடைக்காத காரணத்தினால் த்ரிஷாவுக்கு சிங்கிள் பைசா கூட அட்வான்ஸ் கொடுக்கப்படவில்லையாம்.  

அதையும் மீறி சிம்பு உடனான நட்புக்காக காசு வாங்காமல் போட்டோசெஷனில் கலந்து கொண்டாராம் த்ரிஷா. அதன் பிறகும் அட்வான்ஸ் கொடுக்கவில்லை என்றதும் கடுப்பாகிவிட்டாராம்.  அட்வான்ஸும் தரவில்லை... தயாரிப்பாளர் யார் என்றும் தெரியவில்லை.

இப்படியொரு ப்ராஜக்ட்டுக்காக தேதிகளை பிளாக் பண்ணுவது புத்திசாலித்தனமான காரியமில்லை என்பதால்தான் நாசூக்காக அந்தப்படத்திலிருந்து வெளியே வந்துவிட்டாராம் த்ரிஷா.

 


Post your comment





Related News
திரிஷாவுடன் காதலா? - உண்மையை போட்டுடைத்த சிம்பு.!
விண்ணை தாண்டி வருவாயா கதை இவருக்காக உருவானது தான் - கவுதம் மேனன் வெளியிட்ட ரகசியம்.!
சிம்பு, திரிஷாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்
ஆமாங்க, நான் தான் லூசுப்பயன், பிரபல நடிகையிடம் சிம்பு கலாட்டா
ஜல்லிக்கட்டுக்கு திரிஷா எதிர்ப்பா? சிம்பு விளக்கம்
சிம்பு-திரிஷாவை வைத்து போட்டோஷூட் நடத்திய செல்வராகவன்
செல்வராகவனுக்கு சிம்பு-த்ரிஷா கொடுத்த நம்பிக்கை!
சிம்புவும் நானும் பொருத்தமான ஜோடி : த்ரிஷா !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions