செல்வராகவனுக்கு சிம்பு-த்ரிஷா கொடுத்த நம்பிக்கை!

Bookmark and Share

செல்வராகவனுக்கு சிம்பு-த்ரிஷா கொடுத்த நம்பிக்கை!

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி என ஆரம்பத்தில் ஹிட் படங்களை கொடுத்த செல்வராகவன், அதன்பிறகு இயக்கிய புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் ஆகிய படங்கள் வித்தியாசமான முயற்சிகள் என்றாலும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

ஆனபோதும், தற்போது மீண்டும் புதிய நம்பிக்கையுடன் சிம்பு-த்ரிஷாவை ஜோடி சேர்த்து தனது புதிய படத்தை தொடங்குகிறார் செல்வராகவன். கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்து வெற்றி கூட்டணியான சிம்பு-த்ரிஷா இருவரும் மீண்டும் இணைவதால் இந்த முறை, பலமுறை தான் தவறவிட்ட வெற்றி தனக்கு கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறார் செல்வராகவன்.

அதோடு, தனது வித்தியாசமான முயற்சி என்பது ஒருபக்கமிருந்தாலும், கமர்சியலை மனதில் கொண்டு ரொமான்ஸ் காட்சிகளில் சிம்பு-த்ரிஷாவை அதிக நெருக்கமாக நடிக்க வைக்கப்போகிறாராம்.

அதில் லிப்லாக் காட்சி முக்கியத்துவம் பெறுகிறதாம். மேலும், சிம்புவைப்பொறுத்தவரை செல்வராகவன் இயக்கத்தில் இப்போதுதான் நடிக்கிறார் என்றாலும், த்ரிஷா எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கில் அவர் இயக்கிய ஆடவாரி மாட்லாக்கு அர்த்தாலே வேறுலே என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம்தான் தமிழில் யாரடி நீ மோகினியாக ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
திரிஷாவுடன் காதலா? - உண்மையை போட்டுடைத்த சிம்பு.!
விண்ணை தாண்டி வருவாயா கதை இவருக்காக உருவானது தான் - கவுதம் மேனன் வெளியிட்ட ரகசியம்.!
சிம்பு, திரிஷாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்
ஆமாங்க, நான் தான் லூசுப்பயன், பிரபல நடிகையிடம் சிம்பு கலாட்டா
ஜல்லிக்கட்டுக்கு திரிஷா எதிர்ப்பா? சிம்பு விளக்கம்
சிம்பு படத்திலிருந்து த்ரிஷா விலகல்... உண்மைக் காரணம் என்ன?
சிம்பு-திரிஷாவை வைத்து போட்டோஷூட் நடத்திய செல்வராகவன்
சிம்புவும் நானும் பொருத்தமான ஜோடி : த்ரிஷா !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions