மீண்டும் தள்ளிப்போகும் சிம்புவின் வாலு?

Bookmark and Share

மீண்டும் தள்ளிப்போகும் சிம்புவின் வாலு?

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘போடா போடி’. இப்படத்திற்கு பிறகு ‘வாலு’ படத்தில் நடிக்க தொடங்கினார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இப்படம் ஆரம்பத்திலேயே ஹன்சிகாவும் சிம்புவும் காதல் வயப்பட்டனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இதனால் இப்படம் படப்பிடிப்பு பாதியிலேயே நிற்க தொடங்கியது. சிம்புவும் ஹன்சிகாவும் வெவ்வேறு படங்களில் நடிக்க  ஆரம்பித்தனர். பின்னர் படக்குழுவினர் ஹன்சிகாவை சமரசம் செய்து நடிக்க வைத்தனர். நீண்ட கால படப்பிடிப்பில் இருந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்தது.

அதன்பின் படத்திற்கான பின்னணி வேலைகளும் மெத்தனமாகவே தொடங்கியது. ஒரு வழியாக படத்தை கடந்த வருடம் முடித்தார்கள். பின்னர் படம் இப்போ ரிலீசாகும் அப்போ ரிலீசாகும் என்று சொல்லிக் கொண்டே வந்தார்கள். கடைசியாக மே 9ம் தேதி ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

ஆனால் இந்த தேதியிலும் படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். அதற்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை. அனேகமாக இப்படம் ஜூலையில் தான் ரிலீசாகும் என்று கூறப்படுகிறது. 


Post your comment





Related News
என் திருமணத்தை கடவுள் தீர்மானிப்பார்: சிம்பு
சிம்புவின் வாலு படத்தில் அஜீத்தைப்பற்றிய பாடல்!
11 ஆண்டுகள் கழித்து மோதும் தனுஷ், சிம்பு
அடுத்த நடிகர்களின் ரசிகர்களை எதிர்பார்ப்பதில்லை - சிம்பு
அஜித் பிறந்தநாளன்று வெளிவரும் சிம்புவின் வாலு
சிம்புவின் வாலு படத்திற்கு யு சான்றிதழ்
மார்ச் 27-ல் சிம்புவின் \'வாலு\' ரிலீஸ்... டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார் டைரக்டர் விஜய் சந்தர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions