அஜித் பிறந்தநாளன்று வெளிவரும் சிம்புவின் வாலு

Bookmark and Share

அஜித் பிறந்தநாளன்று வெளிவரும் சிம்புவின் வாலு

சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வாலு. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் இப்படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் நடிக்கும் போது சிம்பு, ஹன்சிகா காதல் பிரச்சனைகளால் படப்பிடிப்பு சிறிது காலம் நின்றது. பின்னர் சமரசமாகி கடைசியாக படப்பிடிப்பை முடித்து, பாடல்கள், டிரைலர்கள் மற்றும் வீடியோ பாடல்கள் ஆகியவற்றை வெளியிட்டனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பினர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியது. இதையடுத்து இப்படத்தை மார்ச் 27ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது இப்படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்படுகிறது.

ஒரு பாடல் இன்னும் படமாக்கப்படவில்லை என்றும், அப்பாடலை விரைவில் முடித்து மார்ச் 27ம் தேதி வெளியிடவும் படக்குழுவும் திட்டமிட்டிருந்தனராம். ஆனால், பாடல் காட்சியை எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறதாம். எனவே, இப்படத்தை ’அஜித்’ பிறந்தநாளன்று மே 1ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர். 


Post your comment





Related News
என் திருமணத்தை கடவுள் தீர்மானிப்பார்: சிம்பு
சிம்புவின் வாலு படத்தில் அஜீத்தைப்பற்றிய பாடல்!
11 ஆண்டுகள் கழித்து மோதும் தனுஷ், சிம்பு
அடுத்த நடிகர்களின் ரசிகர்களை எதிர்பார்ப்பதில்லை - சிம்பு
மீண்டும் தள்ளிப்போகும் சிம்புவின் வாலு?
சிம்புவின் வாலு படத்திற்கு யு சான்றிதழ்
மார்ச் 27-ல் சிம்புவின் \'வாலு\' ரிலீஸ்... டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார் டைரக்டர் விஜய் சந்தர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions