மார்ச் 27-ல் சிம்புவின் 'வாலு' ரிலீஸ்... டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார் டைரக்டர் விஜய் சந்தர்!

Bookmark and Share

மார்ச் 27-ல் சிம்புவின் 'வாலு' ரிலீஸ்... டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார் டைரக்டர் விஜய் சந்தர்!

சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள வாலு திரைப்படம் மார்ச் மாதம் 27ம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக அதன் இயக்குநர் விஜய் சந்தர் தெரிவித்துள்ளார். விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ், பிரம்மானந்தம், 'ஆடுகளம்' நரேன், மந்த்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாலு'.

நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இப்படத்தைத் தயாரித்துள்ளார். ஷக்தி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இதோ, அதோ என வாலு பட ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது. இறுதியாக சிம்பு பிறந்த தினமான இன்று அப்படம் ரிலீசாகும் எனக் கூறப்பட்டது. ஆனால், சொன்னபடி படம் ரிலீசாகவில்லை.

இந்நிலையில், மார்ச் 27-ல் 'வாலு' படம் ரிலீஸ் ஆகும் என்று விஜய் சந்தர் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், சிம்பு பிறந்தநாள் பரிசாக வாலு படத்தின் டீசர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

மூன்று வருடங்களுக்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளிவரும் படம் என்பதால் 'வாலு' படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு படம்', வேட்டை மன்னன் ஆகிய படங்களும் ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.!
தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா
இந்தியன்-2, தளபதி-62 இடையே இப்படியொரு ஒற்றுமையா? - வாவ் சூப்பர்.!
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
அருவி திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !
பாத்ரூமில் அப்படி செய்தேனா? AAA பட தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி.!
அருவி மிக சிறந்த படம் - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions