சிம்பு படத்துக்கும் விக்ரம் படத்துக்கும் உள்ள ஒற்றுமை.?

Bookmark and Share

சிம்பு படத்துக்கும் விக்ரம் படத்துக்கும் உள்ள ஒற்றுமை.?

ஒரே மாதிரியான கதையை ஒரே நேரத்தில் தயாராகும் இரண்டு படங்களில் பார்த்து அதிர்ச்சியடைந்த அனுபவம் ரசிகர்களுக்கு புதிதல்ல. இதுபோல் பலமுறை நடைபெற்றுள்ளது. அண்மையில் கூட அடுத்தடுத்து வெளிவந்த இரண்டு படங்களில் ஒரே மாதிரியான கதை அம்சம் இருந்தது.

இப்படி ஒரு அதிர்ச்சி அனுபவம் ரசிகர்களுக்கு விரைவில் மீண்டும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 10 எண்றதுக்குள்ள படம் த டிரான்ஸ்போர்ட்டர் என்ற ஹாலிவுட் படத்திலிருந்து தழுவப்பட்டது என்ற தகவல் அந்தப்படத்துக்கு பூஜை போட்ட நாளில் இருந்தே அடிபட்டு வருகிறது.

ஒரு லாரி டிரைவரின் பயணம்தான் இந்தப்படத்தின் கதை.  கொஞ்சம் விலாவரியாக சொல்வது என்றால், தமிழ்நாட்டிலிருந்து வட இந்தியாவுக்கு லாரியில் செல்லும்போது அந்த டிரைவர் சந்திக்கும் பிரச்சனைகள்தான் 10 எண்றதுக்குள்ள கதை.

லாரி டிரைவர் என்பதை சற்றே மாற்றி, படத்தின் ஹீரோ பைக்கில் இந்தியா முழுக்க பயணிப்பதுபோல் மாற்றினால் எப்படி இருக்கும்? இதுதான் கௌதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அச்சம் என்பது மடமையடா படத்தின் கதை.

10 எண்றதுக்குள்ள படத்தில் விக்ரம் ஓட்டும் லாரி தமிழ்நாட்டிலிருந்து புறப்படுகிறது. அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்பு ஓட்டும் பைக் கேரளாவிலிருந்து புறப்படுகிறது.

 

 

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions