சிம்பு படத்திற்காக யுவன் போடும் புதிய பிளான்?

Bookmark and Share

சிம்பு படத்திற்காக யுவன் போடும் புதிய பிளான்?

சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் இந்த படத்தில் 9 பாடல்கள் உருவாக இருக்கின்றன.

இந்த ஒன்பது பாடல்களையும் கம்போஸ் செய்யும் பணியில் யுவன் தீவிரமாக உள்ள நிலையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கம்போஸ் ஆக ஆக ஒவ்வொரு பாடல்களையும் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட யுவன் முடிவு செய்திருக்கிறாராம். அடுத்தடுத்த சிறு இடைவெளியில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே வெகுவிரைவில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிம்புவுக்கு இந்த படத்தில் மூன்று ஜோடிகள். இதில் ஒருவர் ஸ்ரேயா நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில், மேலும் இரண்டு நாயகிகளின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இம்மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.


Post your comment





Related News
எதிரி கூட நல்லா இருக்கணும்னு நினைப்பவர் யுவன் - சிம்பு புகழாரம்
சிம்பு இசையில் யுவன் பாடிய பாடல் இதோ
சிம்பு – யுவன் கூட்டணியில் இன்னொரு ரீமிக்ஸ் பாடல்!
சிம்பு-யுவன் கூட்டணியில் 9 பாடல்கள்!
சிம்புவுடன் 5-வது முறையாக இணையும் யுவன்!
அதிக உற்சாகமாக உள்ளேன் - சிம்பு
சிம்பு படத்திற்கு பாட்டு பாடிய யுவன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions