அதிக உற்சாகமாக உள்ளேன் - சிம்பு

Bookmark and Share

அதிக உற்சாகமாக உள்ளேன் - சிம்பு

செல்வராகவன் - யுவன்ஷங்கர் ராஜா - சிம்பு மூவரும் இணையும் புதிய படம் பற்றி செய்தி நேற்று படத்தின் இயக்குனர் செல்வராகவனால் அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டணி தமிழ்த் திரையுலகிற்கு முற்றிலும் வித்தியாசமான ஒரு புதிய கூட்டணி.

"காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி”  ஆகிய படங்களில் இயக்குனர் செல்வராகவன் - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி இசை ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றிக் கூட்டணியாக அமைந்தது.

அதன் பின் யுவன்ஷங்கர் ராஜாவை விட்டு செல்வராகவன் பிரிந்தார். அதன் பின் அவர் இயக்கத்தில் வெளிவந்த 'ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம்' ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பேசப்பட்டாலும், யுவனுடன் இணைந்த படங்களைப் போல வெற்றிப் படங்களைக் கொடுக்க முடியவில்லை.

அதனால் செல்வா - யுவன் கூட்டணி மீண்டும் இணையாதா என்ற ஒரு எதிர்பார்ப்பும் இருந்தது. முன்பே இவர்களிருவரும் இணையப் போவதாக செய்திகள் வெளியாகின. அது தற்போதுதான் உறுதியாகியுள்ளது.

அதே போல் சிம்பு - யுவன்ஷங்கர் ராஜா இணைந்து பணியாற்றிய படங்களான “மன்மதன், வல்லவன், சிலம்பாட்டம்” ஆகிய படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தன.

இப்போது ஒரே படத்தில் செல்வா, சிம்பு, யுவன் இணையும் போது அது மீண்டும் ஒரு வெற்றிக் கூட்டணியாக அமைய வாய்ப்புள்ளது. சினிமாவைப் பொறுத்தவரையில் பல சென்டிமென்ட் பார்க்கப்படுவது வழக்கம்.

அந்த சென்டிமென்ட்டின் அடிப்படையில் இவர்கள் இணைந்துள்ளார்கள் என்று கூட சொல்லலாம். செல்வராகவனுடன் இணைய உள்ள படத்தைப் பற்றி சிம்பு கூறுகையில், “இன்று மிக மிகச் சிறந்த நாள் எனக்கு.

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன், அதனால் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. நானும், செல்வராகவனும் புதிய படம் ஒன்றின் மூலம் புதிய கூட்டணி ஒன்றை அமைக்க உள்ளோம்.

இந்தக் கூட்டணியால் மிகவும் உற்சாகத்துடனும், த்ரில்லுடனும் இருக்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன், “இப்படம் நிச்சயம் நீங்கள் ரசிக்கும் விதத்தில் இருக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நீண்ட நாள் காத்திருப்பு இது,” எனத் தெரிவித்துள்ளார். அரசியலில் மட்டும்தான் ஆயிரமாயிரம் ஆச்சரியங்கள் நடக்க வேண்டுமா என்ன, தமிழ்த் திரையுலகிலும் நடக்கும். இந்த படம் நல்லபடியாக முடிந்து வெளிவந்தால் சரி.


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions