நெகட்டிவ் ரோலில் நடிக்க மாட்டாராம் பாபி சிம்ஹா!

Bookmark and Share

நெகட்டிவ் ரோலில் நடிக்க மாட்டாராம் பாபி சிம்ஹா!

நேரம், ஜிகர்தண்டா ஆகிய படங்களில் வில்லனாக நடித்து விட்டு தற்போது ஹீரோவாக புரோமோஷன் பெற்றிருப்பவர் பாபி சிம்ஹா. அதுவும் அவர் ஹீரோவாக நடித்து ஒரு படம்கூட திரைக்கு வந்து ரசிகர்களின் ஆதரவினை பெறுவதற்கு முன்பே பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அதில் பாம்புசட்டை, உறுமீன், மசாலா படம் ஆகியவை குறிப்பிடத்தக்க படங்கள். இதுதவிர ஆர்யாவுடன் சேர்ந்தும் ஒரு படத்தில் நடிக்கிறார் பாபி சிம்ஹா. ஆனால் இந்த நேரத்தில் அவர் பாம்பு சட்டை படத்தில் நெகட்டிவ் ஹீரோவாக நடித்து வருவதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவியுள்ளது.

அதனால் இதுபற்றி அறிய பாபி சிம்ஹாவை தொடர்பு கொண்டபோது, பாம்பு சட்டை படத்தில் நான் நெகட்டிவ் ஹீரோவாக நடிக்கவில்லை. ஒரு சாதாரணமான இளைஞன் வேடத்தில் நடிக்கிறேன் என்கிறார்.

மேலும் அந்த இளைஞன் சந்திக்கிற பிரச்சினைகள்தான் அப்படம். அதனால் ஒரு காட்சியில்கூட நான் நெகட்டிவ் நடிப்பை வெளிப்படுத்தவில்லை. அதற்கான வாய்ப்பும் அந்த கதையில் கிடையாது.

மேலும், முன்பு முழு வில்லனாக சில படங்களில் என்னை நிரூபித்து விட்ட நான், இப்போது ஹீரோவாகியிருப்பதால் பாசிட்டிவான நடிப்பை முழுமையாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறேன். அதனால் இந்த நேரத்தில் நெகட்டிவ் கேரக்டர்களில் நடிக்கும் ஐடியா துளியும் எனக்கு இல்லை என்கிறார் அவர்.


Post your comment





Related News
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
"அக்னி தேவ்" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..!
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
`திருட்டுபயலே-2' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
விக்ரமுக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions