கரையோரத்தில் நடித்த சிம்ரன்

Bookmark and Share

கரையோரத்தில் நடித்த சிம்ரன்

ஒரு காகலத்தில் கிளாமர் ஏரியாவிலும், பேமிலி ஏரியாவிலும் பட்டைய கிளப்பியவர் சிம்ரன். அவரது திடீர் திருமணம், அவரது சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டது. நம்பர் ஒன் இடத்தில் இருந்த சிம்ரனை ரசிகர்கள் அக்கா, அண்ணி கேரக்டர்களுக்கே ஒத்துக் கொண்டார்கள்.

சில படங்களில் அப்படி நடித்தார். ஆஹா கல்யாணம் படத்தில் வில்லியாக நடித்தார். இப்போது எல்லா கேரக்டர்களிலும் நடிக்க தயாரகிவிட்டார். த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

தற்போது தமிழ் கன்னட மொழிகளில் தயாராகி வரும் கரையோரம் என்ற திகில் படத்தில் நடிதுள்ளார். இந்த படத்தில் வசிஷ்டா என்ற கன்னட நடிகர் ஹீரோவாக நடிக்கிறார். நிகிஷா பட்டேல், இனியா ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.

கடற்கரையோரம் உள்ள ஒரு தனிமையான ரிசார்ட்சில் நடக்கும் திகில் சம்பவங்களை கொண்ட படம். இதனை ஜே.கே.எஸ்.கன்னடா என்பவர் இயக்கி உள்ளார். சஜித் ஷெட்டி இசை அமைத்துள்ளார்.

சிம்ரன் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு பின்னி மில்லில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. சிம்ரனின் கேரக்டர் பற்றி ரகசியமாக வைத்துள்ளனர். அவர் ஆவி பற்றிய ஆராய்சியாளராக நடித்துள்ளார் என்று பட வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சிம்ரனின் வில்லி செண்டிமெண்ட்
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
தனது ஆரம்பகால நடிகையை ஆச்சர்யப்படுத்திய சூர்யா
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
சிகரெட் விளம்பரத்தில் வரும் அந்த குழந்தை இப்போது எப்படி இருக்காங்க தெரியுமா?
தளபதி விஜய்யையே நடனத்தால் அசர வைத்த பிரபல நடிகை - யார் தெரியுமா?
சிவகார்த்திகேயன் படத்தில் சிம்ரனின் ரோல் இதுதானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions