கன்னடத்தில் போலீசாகும் சிம்ரன்

Bookmark and Share

கன்னடத்தில் போலீசாகும் சிம்ரன்

1990-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவருடைய நடனத்துக்கு மயங்காத தமிழ் ரசிகர்களே கிடையாது.

அதேபோல், தமிழில் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்த சிம்ரன் தமிழ் ரசிகர்கள் உள்ளத்தில் என்றும் நீங்கா அடையாளமாக திகழ்ந்து வருகிறார்.

தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்ட சிம்ரன், அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் கால்பதிக்க தொடங்கியிருக்கிறார் சிம்ரன்.

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களை தயாரிக்க முடிவெடுத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், கன்னடத்தில் ஒரு படத்தில் நடிக்க சிம்ரன் ஒப்புக்கொண்டுள்ளார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் சிம்ரன் போலீஸ் வேடத்தில் நடிக்கிறாராம். சிம்ரன் முதன்முதலாக போலீஸ் வேடம் ஏற்று நடிக்கவிருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சிம்ரன் கூறும்போது, இந்த படத்தின் கதையையும், எனது கதாபாத்திரத்தையும் கேட்டு நான் மெய்சிலிர்த்து போனேன். பொதுவாக நான் ஆக்ஷன் படங்களுக்கு மிகப்பெரிய ரசிகை. ஆகையால், இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று கூறியுள்ளார். 


Post your comment





Related News
சிம்ரனின் வில்லி செண்டிமெண்ட்
18 வருடங்களுக்கு பிறகு ஒரே படத்தில் சிம்ரன் - திரிஷா
தனது ஆரம்பகால நடிகையை ஆச்சர்யப்படுத்திய சூர்யா
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
சிகரெட் விளம்பரத்தில் வரும் அந்த குழந்தை இப்போது எப்படி இருக்காங்க தெரியுமா?
தளபதி விஜய்யையே நடனத்தால் அசர வைத்த பிரபல நடிகை - யார் தெரியுமா?
சிவகார்த்திகேயன் படத்தில் சிம்ரனின் ரோல் இதுதானா?
இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions