கெளரவ வேடத்தில் நடிப்பது உற்சாகமாக இருக்கிறது- சிம்ரன்!

Bookmark and Share

கெளரவ வேடத்தில் நடிப்பது உற்சாகமாக இருக்கிறது- சிம்ரன்!

பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு, பார்வதி நாயர், பார்த்திபன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் “கோடிட்ட இடங்களை நிரப்புக”. தற்போது இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்ரன்.

இதுகுறித்து அவர் கூறும்போது;- “இப்படத்தில் நடிப்பது உற்சாகமாக இருக்கிறது. சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் வழக்கமாக நீங்கள் பார்க்கும் கதாபாத்திரமாக இருக்காது. இப்போதைக்கு என் பாத்திர படைப்புக் குறித்து வேறு எதுவும் கூற இயலாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் “எந்தவொரு கதாபாத்திரமாக இருந்தாலும் எனக்கு பிடித்திருந்தால் ஒப்புக் கொள்கிறேன். யாரும் என்னை ஒரு வேடத்தில் நடிக்க வற்புறுத்த முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions