சிம்ரன், விஜயை சந்தித்தார்! அம்மா வேடமாவது கொடுங்கள்! கதறினார்..! என்னாச்சு?

Bookmark and Share

சிம்ரன், விஜயை சந்தித்தார்! அம்மா வேடமாவது கொடுங்கள்! கதறினார்..! என்னாச்சு?

அப்படி ஒரு செய்தியை நம்பவே முடியவில்லை. தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் ஆகிய மொழிபடங்களில் பட்டையைக் கிளப்பியவர் சிம்ரன். பெரிய பெரிய ஹீரோக்களின் கதாநாயகியாக வலம் வந்தவர். அழகும் நடிப்பும் ஒருங்கே அமையப்பெற்ற அபூர்வ  ஹீரோயின்.

சிம்ரன் இடத்தை நிரப்ப இப்போதுவரை யாரும் இல்லை. கோடி கோடியாக சம்பாதித்தவர். திடீரிஎன்று காதல் கல்யாணம் செய்து கொண்டு திரையுலகில்  இருந்து ஒதுங்கி விட்டார். குழந்தை பிறந்தது.

சில டிவி ஷோக்களில் தலை கட்டினார். அப்புறம் ஆளையே காணவில்லை.சமீபத்தில் ஒரு பாலிவுட் படவிழாவில் தோன்றினார் சிம்ரன். முடி நரைத்து..உடல் தளர்ந்து, பரிதாபக் கோலத்தில் வந்து நின்ற காட்சி அனைவரையும் தூக்கி வாரிப்போட்டு விட்டது. அலறி விட்டார்கள்.

அதன் பின் வந்த செய்தி தான் உச்சகட்ட அதிர்ச்சி. இளைய தளபதி விஜய் முன் போய் நின்றார் சிம்ரன் என்கிறார்கள். சிம்ரனின் தோற்றத்தைக் கண்ட இளையதளபதி அலறி விட்டாராம். தேவதை போல தன்னுடன் ஹீரோயினாக நடித்தவர்.

இப்பொது கிழவி போல வந்து நின்ற கோலம் இளகிய மனம் கொண்ட இளையதளபதியை உலுக்கி விட்டதாம். எனக்கு உங்கள் படத்தில் அம்மா வேடம் கொடுங்கள் என்று கூறி குலுங்கி குலுங்கி அழ..விஜய் ஆடிப் போய் விட்டாராம்.

என்ன நடந்தது என்று விசாரிக்க, சிம்ரனால் பதிலே சொல்ல முடியவில்லை என்கிறார்கள். அவரை ஆறுதல் படுத்திய இளைய தளபதி, சிம்ரன் தயாரிப்பில் படம் பண்ணுவதற்கு விஜய் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

பேரரசு இயக்கத்தில், சிம்ரன் தயாரிக்க புதுப் படம் விரைவில் ஆரம்பிக்கிறது என்கிறார்கள் கோடம்பாக்கம் வாசிகள்.

கடவுளே,சிம்ரனுக்கு என்னாச்சு..!? உண்மையா வெறும் வதந்தியா..!!


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions