சிங்கம் 3 புதிய போலீஸ் கதை...!?

Bookmark and Share

சிங்கம் 3 புதிய போலீஸ் கதை...!?

சூர்யா தற்போது விக்ரம் குமார் இயக்கத்தில் 24 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பெயர் மாற்றப்பட வாய்ப்புள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு அட்டகத்தி பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடிக்க வேண்டியது.

ஆனால், ரஞ்சித்துக்கு ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் அவர் சூர்யா படத்தை இப்போதைக்கு இயக்க மாட்டார் என்கிறார்கள்.

அப்படி ரஞ்சித் போய்விட்டார் சூர்யா அடுத்து ஹரி இயக்கத்தில்  சிங்கம் படத்தில் நடிக்கவே அதிகம் வாய்ப்புள்ளதாம். சூர்யாவிற்கு முதலில் இந்த மூன்றாம் பாகத்தில் நடிக்க விருப்பமில்லையாம்.

தொடர்ந்து ஒரே மாதிரியான போலீஸ் வேடத்தில் எப்படி நடிப்பது என்று யோசித்தாராம். ஆனால், சிங்கம் 3 படத்தின் கதையில் பல புதுப் புது விஷயங்களை இயக்குனர் ஹரி சேர்த்திருக்கிறாராம்.

அதைக் கேட்ட பிறகு உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் சூர்யா கூறியுள்ளார்.  சிங்கம் படத்தில் உள்ளூர் தாதாவான பிரகாஷ்ராஜை எதிர்ப்பது கதை,  சிங்கம் 2 வில் இன்டர்நேஷனல் தாதாவான டானி சபானியை எதிர்ப்பது கதை.

அப்படியென்றால்  சிங்கம் 3 யில் சூர்யா யாரை எதிர்க்கப் போகிறார் என்பதை இதற்குள் சொல்லி விடுவார்களா என்ன?. படத்தின் நாயகிகளாக முதலிரண்டு பாகத்தில் இடம் பெற்ற அனுஷ்காவும், புதிதாக ஸ்ருதிஹாசனும் நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை. விரைவில் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்


Post your comment





Related News
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions