சிங்கத்தை சீண்டும் தெலுங்கு படம்

Bookmark and Share

சிங்கத்தை சீண்டும் தெலுங்கு படம்

தமிழில் மிர்சி சிவா நடிப்பில் தமிழ் சினிமாக்களை கிண்டல் செய்து எடுக்கப்பட்ட தமிழ் படம் போன்று தெலுங்கு சினிமாக்களை கிண்டல் செய்து ஹ்ருதய கலேயம் என்ற படத்தில் நடித்தவர் சம்பூர்ணேஷ் பாபு. அதிரிபுதிரியான இந்தப் படத்தின் ஹிட்டுக்கு பிறகு சம்பூர்ணேஷ் பாபுவின் அடுத்த படத்துக்காக ஆந்திராவே வெயிட்டிங்.

அடுத்து அவரது அதிரடி படம் சிங்கம் 123, தமிழில் வெளிவந்த சிங்கம் பாகம் 1, பாகம் 2, வரப்போகிற பாகம் 3 உள்பட தெலுங்கு ஹீரோக்கள் நடித்த போலீஸ் படங்களையெல்லாம் போட்டு தாக்கி உருவாக்கி இருக்கிறது சிங்கம் 123. மோகன்பாபுவின் மகன் மஞ்சு தயாரித்துள்ளார், சனம் ஹீரோயின். அஜய் சர்மா இயக்கியுள்ளார்.

படத்தின் ஹீரோ சம்பூர்ணேஷ் பாபு போலீஸ் ஹீரோக்களை போட்டு தாக்குகிறார். அதில் நம்ம ஊர் சூர்யாவும், விஜயகாந்தும்கூட தப்பிக்க வில்லை. அடிக்கடி விஜயகாந்த் போன்று நாக்கை துறுத்திக் கொண்டு வசனம் பேசுகிறார். படத்தின் சம்பூர்ணேஷ் பாபு பேசும் சில வசனங்கள் இவை. நம்ம ஊர் ஹீரோக்களின் வசனத்தோடு ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

நான் பொறந்தப்பவே போலீஸ் டிரஸ்ஸோடு பொறந்தவன்டா பெண்களுக்கு ஆபத்து என்றால் அரைமணி நேரம் லேட்டாத்தான் வருவேன். ஆண்களுக்கென்றால் அரை நொடியில் வருவேன்.

நான் அடிச்சா அடிவாங்கினவன் ஒண்ணு கோமாவுல இருப்பான் இல்லேன்னா மார்சுவரியில இருப்பான். நான் கொசுடா. கொசு தாகம் எடுத்தாலும் ரத்தம்தாண்டா குடிக்கும். எமனுக்கு ரெஸ்ட் வேணும்னுதான் எண்கவுண்டரை நிறுத்தி வச்சிருக்கேன்டா. எமோசனோட டூயூட்டி பார்த்தா புரமோசன் தானா வரும்டா. தமிழ்லேயும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். வெயிட் பண்ணுங்க...!


Post your comment





Related News
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
புகார் தெரிவித்தால் ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை: முன்னணி நடிகர் பேட்டி
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions