சூர்யாவின் சிங்கம் 3 படத்திற்கு வரிவிலக்கு

Bookmark and Share

சூர்யாவின் சிங்கம் 3 படத்திற்கு வரிவிலக்கு

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சி3' திரைப்படம் வரும் 26ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

சிங்கம், சிங்கம் 2 வெற்றி படங்களை அடுத்து மூன்றாம் பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் சென்சாரில் ஏற்கனவே 'யூ' சர்டிபிகேட் பெற்றுள்ள நிலையில் தற்போது தமிழக அரசின் 30% வரிவிலக்கையும் பெற்றுள்ளது. இந்த செய்தி விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளருக்கு தித்திக்கும் செய்தியாக உள்ளது.

தமிழக அரசின் வரிவிலக்கு இந்த படத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதப்படுகிறது.

சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர்,  ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.


Post your comment





Related News
சிங்கம்-3 இத்தனை கோடி தான் ஷேர் கிடைத்ததா? அதிர்ச்சி தகவல்
குற்றம்-23, துருவங்கள் 16 ஆகிய தரமான படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
இயக்குனர் ஷங்கரிடம் பாராட்டை வாங்கிய அருண் விஜய்!
அவரே பாராட்டிவிட்டார் – உச்சகட்ட குஷியில் குற்றம் 23 படக்குழு!
அண்மையில் வெளியாகி வெற்றிநடைபோடும் படம்- படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினி
குற்றம்-23 பிரமாண்ட வசூல்- முழு விவரம்
இளம் நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்
குற்றம்-23 நான்கு நாட்களில் இத்தனை கோடி வசூலா? அருண் விஜய் வேற லெவல்
மலேசியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா? சிங்கம்-3 சாதனை
இயக்குனர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? பிரபல நடிகை உணர்ச்சிவசம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions