சிங்கத்தின் வேட்டை தொடரும்: `சி4' வரும் என ஹரி பேட்டி

Bookmark and Share

சிங்கத்தின் வேட்டை தொடரும்: `சி4' வரும் என ஹரி பேட்டி

சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘சி3’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. `சிங்கம்', `சிங்கம் 2'  படத்தின் அடுத்த பாகமாக உருவாக்கியுள்ள `சி3' படத்தை ஹரி இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யா - அனுஷ்கா ஷெட்டி,  ஸ்ருதிஹாசன், விவேக், சூரி, ராதாரவி, தாகூர் அனூப் சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் படம் ரிலீசான 6 நாட்களிலேயே 100 கோடியை வசூலித்து  புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது. சூர்யா நடிப்பில் குறைந்த நாட்களில் 100 கோடி வசூலை குவித்துள்ளது.

`சி3' படம் வெற்றியையடுத்து இயக்குநர் ஹரிக்கு,  நடிகர் சூர்யா டொயோடா ஃபார்டியூனர் காரை பரிசளித்துள்ளார். 

இந்நிலையில், இயக்குநர் ஹரி அளித்த பேட்டியில் சூர்யாவுடன் இணைந்து `சிங்கம்' படத்தின் நான்காவது பாகத்தை எடுக்க  உள்ளதாக கூறினார். சிங்கத்தின் வேட்டை தொடரும் என்றும் ஹரி குறிப்பிட்டுள்ளார். 

ஹரி அடுத்ததாக விக்ரமை இயக்க உள்ளார். `சாமி' படத்தின் அடுத்த பாகமாக `சாமி 2' படத்தை இயக்க உள்ளது  குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் சிங்கம் படத்தைப் போன்று வேறொரு கதைக்களத்தில் சூர்யாவுடன் இணையவுள்ள ஹரி, அதன்பின்னர் `சி4' படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Post your comment

Related News
சிங்கம்-3 பிரமாண்ட கேரளா வசூல்
S3 பட வெற்றி- இயக்குனர் ஹரிக்கு சூர்யா என்ன செய்தார் தெரியுமா?
சிங்கம்-3 ரூ 100 கோடி வசூல் எப்போது வரும்?
பிரபல நடிகையுடன் சிங்கம் 3 பட வெற்றியை கொண்டாடிய சூர்யா
ஆந்திராவில் சிங்கம்-3 ருத்ரதாண்டவம்- வசூல் சாதனை
பைரவா வசூலை முறியடிக்க தவறிய சிங்கம்-3, முழு விவரம்
சிங்கம் 3, போகன், Jolly LLB2, Nenu Local பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
மாஸ் காட்டும் சூர்யாவின் S3 பட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
தென்னிந்தியாவே அதிரும் 3 நாள் சி3 வசூல்- சூர்யா பிரமாண்ட சாதனை
திருட்டு விசிடி கும்பலின் ஆட்டத்தை அடக்கியது இப்படித்தான், சொல்கிறது S3 படக்குழுAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions