விசாகப்பட்டணத்தில் தொடங்கும் சூர்யாவின் சிங்கம் 3

Bookmark and Share

விசாகப்பட்டணத்தில் தொடங்கும் சூர்யாவின் சிங்கம் 3

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சிங்கம்,’ ‘சிங்கம்-2’ ஆகிய 2 படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. ‘சிங்கம்’ படத்தில் சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடித்து இருந்தார்.‘சிங்கம்-2’ படத்தில் சூர்யா ஜோடிகளாக அனுஷ்கா, ஹன்சிகா ஆகிய இருவரும் நடித்திருந்தனர்.

இந்த இரண்டு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சிங்கம் படத்தின் மூன்றாவது பாகத்தை எடுக்க ஹரி திட்டமிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் இறுதியில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், சென்னையைப் புரட்டிப் போட்ட மழையால் படப்பிடிப்பு தள்ளிப் போனது.

தற்போது வடகிழக்குப் பருவமழை முடிவடைந்த நிலையில், அடுத்த வாரம் விசாகப் பட்டிணத்தில் சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions