நானும் இயக்குனர்தான்! பதிவு செய்யும் சிங்கம்புலி!

Bookmark and Share

நானும் இயக்குனர்தான்! பதிவு செய்யும் சிங்கம்புலி!

தற்போது காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிங்கம்புலி. மறைந்த இயக்குனர் இராசுமதுரவன் இயக்கிய மாயாண்டி குடும்பத்தார் படத்தில் காமெடியனாக அறிமுகமான இவர், மிளகா, தூங்கா நகரம், முத்துக்கு முத்தாக, மரங்கொத்தி பறவை, தேசிங்கு ராஜா படங்கள் மூலம் இப்போது பிரபல காமெடியன் பட்டியலில் சேர்ந்திருக்கிறார்.

ஆனால், இவரை நடிகராக பார்க்கும் ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் இவர் ஒரு இயக்குனர் என்பது தெரிவதில்லை. அதோடு மேடைகளில் நிகழ்ச்சி தொகுத்து வழங்குபவர்களும் இவரை ஒரு காமெடியன் என்று மட்டுமே கருதி, சிங்கம்புலி என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் தன்னை சிங்கம்புலி என்று வெறுமனே அழைத்தால் டென்சனாகி விடுகிறார் அவர்.

அதையடுத்து, தான் மைக் பிடித்து பேச வரும்போது, தன்னை சிங்கம்புலி என்று சாதாரணமாக குறிப்பிட்ட தொகுப்பாளர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் இப்போது வேண்டுமானால் வெறும் நடிகராக இருக்கலாம். ஆனால் அஜித், சூர்யா போன்ற நடிகர்களை வைத்து படம் இயக்கியவன். அஜித் நடித்த ரெட், சூர்யா நடித்த மாயாவி படங்கள் நான் இயக்கிய படங்கள்தான் என்று கூறி, தானும் ஒரு இயக்குனர் என்பதை பதிவு செய்கிறார் சிங்கம்புலி. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions