சிங்கப்பூர் டேஸ் ஆக மாறுமா பெங்களூரு டேஸ்?

Bookmark and Share

சிங்கப்பூர் டேஸ் ஆக மாறுமா பெங்களூரு டேஸ்?

ஆரம்பம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தவர் தெலுங்கு நடிகர் ராணா. மிகப்பெரிய வெற்றிபெற்ற பெங்களூர் டேஸ் மலையாளப்படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகனாக நடிக்கிறார் ராணா டகுபதி.

மலையாளத்தில் ஃபஹத் ஃபாசில், நஸ்ரியா நடித்த கேரக்டர்களில் சித்தார்த், சமந்தா இருவரும் இணைந்து நடிப்பதாக இருந்தது. அவர்களது காதல் பிரேக்கப்பானதால் அவர்கள் இருவருமே இப்படத்திலிருந்து தற்போது விலகிவிட்டனர்.

எனவே, ஃபஹத் பாசில் நடித்த கேரக்டரில் நடிக்க ராணாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கவிருக்கிறார். பெங்களூர் டேஸ் மலையாளப் படத்தில் துல்கர் சல்மான் நடித்த கேரக்டரில் ஆர்யாவும், நிவின் பாலி நடித்த கேரக்டரில் பாபி சிம்ஹாவும் நடிக்க இருக்கிறார்களாம்.

தெலுங்கில் முன்னணி இயக்குநராக வலம் வரும் பொம்மரிலு பாஸ்கர் இப்படத்தை இயக்குகிறார். முதல்கட்டப் படப்பிடிப்பு மார்ச் 20ஆம் தேதி முதல் சென்னையில் ஆரம்பமாகிறது. சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கிறார்.

பெங்களூர் டேஸ் மலையாளப்படத்தில் கதைக்களம் பெங்களூருவாக இருந்தது. இந்த ரீமேக் படத்தில் பெங்களூருவுக்குப் பதில் சிங்கப்பூரை கதைக்களமாக்கிவிட்டனர். எனவே, இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பை சிங்கப்பூரில் நடத்தவிருக்கிறார்களாம். அப்ப சிங்கப்பூர் டேஸ்னு டைட்டில் வைப்பாங்களோ?


Post your comment





Related News
சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடும் மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் 3 நாள் வசூல் நிலவரம் இதோ.!
சென்னை 2 சிங்கப்பூர் இசைபயணம் நிறைவு
சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் பாடல்கள் இணையத்தளங்களில் கசிந்தது
‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இரண்டாவது பாடல் பூட்டானில் வெளியிடப்பட்டது
பெங்களுர் நாட்கள் படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி!
நாளை முதல் திரையை கலக்கவரும் பெங்களுர் நாட்கள்!
‘பெங்களூர் நாட்கள்’ டிரைலர் இன்று வெளியாகிறது!
பெங்களூர் நாட்கள் படத்தை தொடர்ந்து தற்போது அடுத்த மலையாள ரீமேக்?
பெங்களூர் டேஸ் ரீமேக் படத்தின் தலைப்புக்கு புது சிக்கல்?
பெங்களூரில் வீடு கட்டும் பெங்களூர் டேய்ஸ் ஜோடி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions