பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம்: பாடகர் அபிஜீத் மீது வழக்குபதிவு

Bookmark and Share

பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம்: பாடகர் அபிஜீத் மீது வழக்குபதிவு

பாலிவுட்டில் 1990களில் பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுக்கு குரல் கொடுத்தவர் பிரபல பின்னணி பாடகர் அபிஜீத் பட்டாச்சார்யா. இவர் மும்பையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற துர்கா பூஜை விழாவில் கலந்துகொண்ட ஒரு பெண்ணிடம், செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை லோகந்த்வாலா பகுதியில் நடந்த விழாவில், பாடகர் கைலாஷ் கெர் கச்சேரி நடந்தது. அப்போது, விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அபிஜீத், தன்னை தொட்டு சில்மிஷம் செய்தததாக 34 வயது பெண் ஒருவர், போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அபிஜீத், அந்தப் பெண்ணுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது விழா ஏற்பாட்டுக் குழுவில் ஒருவரான அவரது மாமாவும் உடன் இருந்தார் என்றும் தெரிவித்தார்.

“அந்தப் பெண்ணை யார் என்றே தெரியாது. 50 ஆயிரம் பேருக்கு முன் அதுபோன்ற சம்பவம் (சில்மிஷம்) நடப்பது சாத்தியமே இல்லை. எனது குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர். அவர் காவல் நிலையம் செல்லவில்லை. அவர் திட்டியதால் அவரை மேடையில் இருந்து வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது” என்று அபிஜீத் விளக்கம் அளித்துள்ளார். 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions