என்னுடைய ஆரம்பமே அமர்க்களமாக அமைந்து விட்டது - பாடகி நமீதா பெருமிதம்.!

Bookmark and Share

என்னுடைய ஆரம்பமே அமர்க்களமாக அமைந்து விட்டது - பாடகி நமீதா பெருமிதம்.!

ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான பாடகர்கள் அறிமுகமாகும் தமிழ் சினிமா துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பது எந்த ஒரு இளம் பிண்ணனி பாடகருக்கு சவாலான காரியமே.

தமிழ் சினிமாவின் அடுத்த சிறந்த பாடகியாக வேண்டும் என்ற கனவோடும் , அதற்கான திறமையோடும் இருக்கும் நமீதா பாபுவின் பிண்ணனி பாடகி வாழ்க்கைக்கு ஒரு நல்ல துவக்கம் கிடைத்துள்ளது. 'சண்டி வீரன் ' படத்தில் 'அலுங்குறேன் குலுங்குறேன்' பாடல் மூலம் ஹிட் கொடுத்து தனது பயணத்தை தொடங்கியவர் நமீதா பாபு. 

இது குறித்து நமீதா பாபு பேசுகையில் , '' எனது பாடகி வாழ்க்கைக்கு கிடைத்திருக்கும் துவக்கம் மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளது. 'சண்டிவீரன்' படத்தில் அழகான பாடலோடு ஆரம்பித்த எனது பயணம் 'திருநாள்' படத்தில் வெற்றிகரமாக தொடர்ந்தது. பிறகு 'மகளிர் மட்டும்' படத்தில் ஜிப்ரான் அவர்கள் இரண்டு முத்தான பாடல்களை எனக்கு தந்து எனக்கு பல பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் பெற்று தந்தார் .

தற்பொழுது 'தீரன் அதிகாரம் ஒன்று ' படம் தெலுங்கில் 'காக்கி' என்ற பெயரில் ரிலீஸாகியுள்ளது. அப்படத்திலும் பாடியுள்ளேன். இந்த மாதிரியான அருமையான பாடல்களை தொடர்ந்து பாட விரும்புகிறேன். சிறந்த பின்னணி பாடகியாகவேண்டும் என நான் போட்டு கொண்டிருக்கும் உழைப்பு என்னை நிச்சயம் உயர்த்தும் என நம்புகிறேன்.

வெஸ்டர்ன் க்ளாசிக்கலில் முறையாக பயிற்சி பெற்று தேர்ந்துள்ளதால் எல்லா வகையான பாடல்களை என்னால் பாட முடியும். நிறைய இசையமைப்பாளர்களோடு இணைந்து பல அருமையான , ஹிட் பாடல்களை நான் பாட ஆவலோடு உள்ளேன் ''

'Nspire School Of Music' என்ற இசை பள்ளியை சென்னையில் நடித்திவருகிறார் நமீதா பாபு. இந்த இசை பள்ளியை இசையமைப்பாளர்கள் ஜிப்ரான், ஸ்ரீகாந்த் தேவா மற்றும் SN அருணகிரி ஆகியோர் திறந்து வைத்து சிறப்பித்துள்ளனர். வரும் 24 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் 'வீரையன்' படத்தில் நமீதா பாபு மூன்று பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment

Related News
நமீதா படத்தின் இயக்குனர் வெளியேற்றம்
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்!
தானும் அழுது அத்தனை பேரையும் அழவைத்த சூப்பர் சிங்கர் சக்தி! கண்ணீர் விடவைத்த தருணம்
திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட நமிதா - ஷாக்காக்கும் புகைப்படம்.!
சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இப்படிபட்டவர்களா?- ஷாக் ஆன ரசிகர்கள்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions