சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா!

Bookmark and Share

சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா!

அட...30 வயது கடந்தால்தான் பலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் போலிருக்கிறது. ஏற்கெனவே 30 வயதைக் கடந்த அனுஷ்கா, மிகப் பெரிய ஹீரோக்களுக்குக் கூட கிடைக்காத அளவிற்கு இரண்டு பிரம்மாண்டமான சரித்திரப் படங்களான ருத்ரமாதேவி, பாகுபலி படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.

அடுத்து, அப்படிப்பட்ட 30 வயதைக் கடந்த அதிர்ஷ்டம் நயன்தாராவுக்கும் அதிகமாகவே அடித்து வருகிறது. ஏற்கெனவே தமிழில் கை நியை படங்களை வைத்து ஒவ்வொரு ரிலீசுக்காக நயன்தாரா காத்திருக்கிறார்.

இந்த நிலையில் அவரைத் தெலுங்கிலும் நடிக்க வைக்க பலத்த போட்டி ஏற்பட்டு வருகிறது.

சிரஞ்சீவி விரைவில் நடிக்கவிருக்கும் 150வது படத்தில் அவர் ஜோடியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சு வார்த்தை முடிந்துவிட்டது என்கிறார்கள்.

விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது. இந்த படத்தோடு பாலகிருஷ்ணா ஜோடியாகவும் நயன்தாரா நடிக்கப் போகிறார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.

நயன்தாரா தற்போது தமிழில் ஜீவா ஜோடியாக திருநாள் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்த படத்துடன் இதற்கு முன் ஒப்பந்தமான நானும் ரெளடிதான், காஷ்மோரா, மாயா, தனியொருவன், இது நம்ம ஆளு ஆகிய படங்களின் படப்பிடிப்பும் நடந்து வருகின்றன.


சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா முதன் முறையாக நடிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது உறுதியாகும் பட்சத்தில் நயன்தாராவிற்கு தெலுங்கில் மேலும் பல புதுப்பட வாய்ப்புகள் குவிவது நிச்சயம் என்கிறார்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions