கதை சொன்னவர்களை விரட்டிய சிருஷ்டி!

Bookmark and Share

கதை சொன்னவர்களை விரட்டிய சிருஷ்டி!

'மேகா'ங்கற அழகான காதல் படத்தில்தான் அறிமுகமானார் சிருஷ்டி டாங்கே. ஆனா சினிமா நினைச்சதை தந்துடுமா? பாதையை மாற்றிப் போட்டுடுச்சு. 'டார்லிங்' படத்தில் ஜி.வி.பிரகாஷை காதலித்து ஏமாற்றிவிட்டு இன்னொருவருடன் சுற்றும் கார்ல் கேர்ளாக நடித்தார்.

அடுத்து 'எனக்குள் ஒருவன்' படத்தில் சித்தார்த் ஜோடி என ஆர்வமாக நடிச்சார். என்ன ஆச்சு.. அவரை மயக்கி படுக்கையில் தள்ள முயற்சிக்கும் அலைச்சல் பார்ட்டி கேரக்டர்னு அப்புறமாத்தான் புரிஞ்சுது.

அப்புறம் மளமளன்னு சிருஷ்டிக்கு வாய்ப்புகள் குவிந்தது. "இது கிராமத்து சப்ஜெக்ட். நீங்க என்ன பண்றீங்க. ஊர் பண்ணையாரை மாந்தோப்புக்குள்ள பாட்டு பாடி மயக்கி அப்படியே பம்பு செட்டுக்குள்ள கூட்டிட்டு போறீங்க...." "இது சிட்டி சப்ஜெக்ட். யாருக்குமே அடங்காத ஹீரோவை அடக்க வில்லன் உங்களை அனுப்பி வைக்கிறார்.

ஒரு இரவு ஹீரோவோட இருக்கீங்க. ஹீரோ ஜீரோ ஆகுற அளவுக்கு இருக்கணும் உங்க பெர்ஃபாமென்ஸ்...." என்று ஆளாளுக்கு கதை சொல்ல மிரண்டுதான் போனார் சிருஷ்டி.

"என்னைப் பார்த்தா உங்களுக்கு அப்படியா தெரியுது" என்று கதை சொல்ல வந்தவர்களை திருப்பி அனுப்பிவிட்டு இனி அந்த மாதிரி கேரக்டரில் நடிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டார். நடிச்சா ஹீரோயின்தான் என்று இருந்தவருக்கு விஜய் வசந்தின் 'கற்பவை கற்றபின்' படத்தில் ஹீரோயின் வாய்ப்பு தேடிவந்தது.

இதுதவிர 'புரியாத ஆனந்தம் புதிராக ஆரம்பம்', 'கத்துக்குட்டி', 'நேருக்கு நேர்' படங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். சரியான நேரத்தில் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் சிருஷ்டி. 


Post your comment





Related News
ராத்திரி நேரத்துல கன்னக்குழி அழகி செய்த வேலை - ஷாக்கான ரசிகர்கள்.!
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"
நான் கண்மூடித்தனமான அஜித் ரசிகை- பிரபல நடிகை
படப்பிடிப்பில் தொல்லை கொடுத்த இயக்குனர்- கண்ணீர் விடும் நடிகை
மோகன்லால் படத்தில் நடிப்பது பெருமை! - நடிகை சிருஷ்டி டாங்கே
முப்பரிமாணம்... சாந்தனுவின் புதிய பரிமாணம்!
நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன்: சிருஷ்டி டாங்கே
தர்மதுரையில் ராதிகாவின் பெயர் ஏன் வரவில்லை – சீனு ராமசாமி விளக்கம்!
உதயநிதியின் அடுத்த படத்தில் இரண்டு கதாநாயகிகள்!
சிருஷ்டி டாங்கேயிடம் ஏற்பட்ட மாற்றம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions