கன்னடத்திலும் வொர்க்அவுட்டான சிவகார்த்திகேயன்

Bookmark and Share

கன்னடத்திலும் வொர்க்அவுட்டான சிவகார்த்திகேயன்

தொட்டதெல்லாம் துலங்கும் என்று சொல்வது இப்போது சிவகார்த்திகேயன் விஷயத்தில் உண்மையாகி இருக்கிறது. மெரீனா படம் தொடங்கி காக்கி சட்டை வரை அவர் நடித்த படங்கள் எல்லாம் வெற்றிப்படங்கள்தான். தற்போது அவர் நடித்து வரும் ரஜினிமுருகன் படமும் இந்த வரிசையில் இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்கள் திரைத்துறையினர்.

இதற்கிடையில், கன்னட நடிகர் சிவராஜ்குமாருடன்,  வஜ்ரகயா என்ற கன்னட படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்தார் சிவகார்த்திகேயன். 

இப்படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமின்றி, மலையாள நடிகர் திலீப், தெலுங்கு நடிகர் ரவி தேஜா, கன்னட நடிகர் ரவிச்சந்திரன் ஆகியோரும் கேமியோ ரோல்களில் நடித்திருக்கிறார்கள்! கன்னட சினிமா ரசிகர்கர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருந்த வஜ்ரகயா நேற்று (12-6-15) வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல். மிகப்பெரியை ஓப்பனிங்கோடு முதல் நாளே நல்ல வசூலையும் தந்திருக்கிறது.

எனவே வஜ்ரகயா திரைப்படம் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் உட்பட அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தன் மகிழ்ச்சியை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை - சிவா பேட்டி
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions