என்னை தாக்கியது கமல் ரசிகரே அல்ல-சிவாவின் வாக்குமூலம்… மதுரை விவகாரத்தில் திடீர் திருப்பம்

Bookmark and Share

என்னை தாக்கியது கமல் ரசிகரே அல்ல-சிவாவின் வாக்குமூலம்… மதுரை விவகாரத்தில் திடீர் திருப்பம்

சிவகார்த்திகேயன் மதுரையில் தாக்கப்பட்ட விவகாரம் கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் சிவகார்த்திகேயனை நலம் விசாரித்து வருகின்றனர். இதற்கு பலரும் பல காரணங்களைக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை அறிந்த ரஜினி உடனே சிவகார்த்திகேயனை தொலைப்பேசியில் அழைத்து ‘கவனமா இருங்க. பொது இடங்களுக்கு போவதை குறைத்துக்கோங்க’ என்று அறிவுரை கூறினாராம். இதனால் சிவகார்த்திகேயன் மிகவும் மனம் உருகிவிட்டாராம்.

Fortune Computersஇந்த செய்தி இதோடு இல்லாமல் மேலும் தற்போது சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. சம்பவம் நடந்த சில மணி நேரம் கழித்து மதுரை போலீஸ் அதிகாரிகள், சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டு ‘நீங்க அவங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்தால் சம்பந்தப்பட்டவரை கைது செய்வோம்’ என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இதற்கு சிவகார்த்திகேயன் உடன்படவில்லையாம். “என்னை தாக்கியது கமல் ரசிகரே அல்ல” என்றும் கூறிவிட்டாராம். இதே மதுரையில் சிவகார்த்திகேயனின் அப்பா போலீஸ் உயரதிகாரியாக பணி புரிந்திருக்கிறார் என்பதும், அவரது நண்பர்கள் பலரும் இப்போதும் அதே ஏரியாவில் உயர் பதவியில் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Post your comment

Related News
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
தனது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions