சிக்கல் மேல் சிக்கலில் சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

சிக்கல் மேல் சிக்கலில் சிவகார்த்திகேயன்!

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினிமுருகன்’ படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்ற பிரச்சனை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து, தற்போது படம் வரும் போது வரட்டும் என வெறுத்துவிட்டனர்.

சிவா அடுத்ததாக பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் சிவா பெண் வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. அதற்காக அண்மையில் சிவகார்த்திகேயனை வைத்து பெண் கெட்டப்பில் ஒரு போட்டோஷூட் நடத்தினர். நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளனர். ஏற்கனவே ரஜினிமுருகன் படத்தால் அப்செட்டில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு ‘சிகை’ என்ற படம் குறித்த தகவல்கள் அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம்.

இப்படத்தில் மதயானைக்கூட்டம் மற்றும் கிருமி படங்களில் நடித்த கதிர், சில காட்சிகளில் லேடி கெட்டப்பில் நடிக்கிறாராம். லேடி கெட்டப்பில் எடுக்கப்பட்ட போட்டோவை வைத்து சிகை படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படம், கதிர் நடிக்கும் சிகை இரண்டு படங்களிலும் ஹீரோ, லேடி கெட்டப்பில் வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதை வைத்துப்பார்த்தால் இரண்டு படமும் ஒரே கதைபோல் தோன்றுகிறதே என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை - சிவா பேட்டி
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions