மதுரையில் 'ரஜினி முருகன்' இசை வெளியீடு!

Bookmark and Share

மதுரையில் 'ரஜினி முருகன்' இசை வெளியீடு!

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் பொன்ராம் - சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்துள்ள படம் 'ரஜினி முருகன்'. கடந்த சில வாரங்களுக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

அதன்பின் படத்தின் முதல் பார்வையை ஏப்ரல் 25ம் தேதியன்று வெளியிட்டனர். அடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டை ஜுன் 7ம் தேதி நடத்தப் போவதாக முன்பே அறிவித்திருந்தனர். அதன்படி படத்தின் இசை வெளியீட்டை ரசிகர்கள் முன்னிலையில் மதுரையில் நடத்தத் திட்டமிட்டுள்ளனராம்.

அதில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட படத்தின் நட்சத்திரங்களும், மற்ற கலைஞர்களும் கலந்து கொள்ளப் போகிறார்களாம். அதையடுத்து படத்தின் வெளியீட்டை ஜுலை 17ம் தேதியன்று வெளியிடப் போகிறார்கள்.

'ரஜினி முருகன்' படத்தின் முதல் பார்வை, இசை வெளியீடு, படத்தின் வெளியீடு ஆகியவற்றை குறிப்பிட்ட தேதிகளில் நடத்தப் போவதாக மார்ச் மாதம் 20ம் தேதியன்றே முறைப்படி அறிவித்துவிட்டார்கள்.

அதிலிருந்து எந்த மாற்றமும் செய்யாமல் திட்டமிட்டபடி அனைத்தையும் 'ரஜினி முருகன்' குழுவினர் செய்யப் போகிறார்களாம். இந்தப் படம் மீது ஆரம்பிக்கும் போதே அதிக எதிர்பார்ப்பு எழுந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions