'கத்துக்குட்டி' படத்தை கொண்டாடும் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விமல், சூரி,இயக்குநர் பொன்ராம்

Bookmark and Share

'கத்துக்குட்டி' படத்தை கொண்டாடும் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விமல், சூரி,இயக்குநர் பொன்ராம்

இன்று வெளியாகி இருக்கும் 'கத்துக்குட்டி' படம் பார்த்து நடிகர்கள் சிவகார்த்திகேயன், விமல், சூரி,இயக்குநர் பொன்ராம் ஆகியோர் 'தமிழ் ரசிகர்கள் தவற விடக்கூடாத படம் கத்துக்குட்டி' எனப் பாராட்டினார்கள். அதுகுறித்த விரிவான விவரம்...

நடிகர் சிவகார்த்திகேயன்:

''சூரி அண்ணன் ஷூட்டிங்கில் மீட் பண்றப்ப எல்லாம் 'கத்துக்குட்டி' படத்தைப் பத்தி சொல்லிக்கிட்டே இருப்பார். அவர் ரொம்ப நல்ல படம்னு சொன்னதால் நான் வேறுவிதமான கற்பனையோட கத்துக்குட்டி பார்க்க வந்தேன். ஆனால், நல்ல விஷயத்தை பக்கா கமர்ஷியலா சொல்லி கலக்கி இருக்காங்க. நாம சாப்பிடுற சாப்பாடு எவ்வளவு வலிகளைக் கடந்து நம்ம கைக்குக் கிடைக்குதுங்கிறது இங்கே யாருக்குமே தெரியிறது இல்லை. இந்தப் படத்தோட மையக்கருத்தே இதுதான்.

இவ்வளவு அழுத்தமான கதையை வயிறு வலிக்க சிரிக்கச் சிரிக்கச் சொல்லி இருக்கிறது ரொம்ப புதுசா இருக்கு. வாழைப் பழத்துல ஊசி ஏத்துற மாதிரி நம்மளை சிரிக்க வைச்சே விவசாயத்தோட வலியையும் சரியா உணர வைக்கிறாங்க. குறிப்பா சூரி அண்ணன் வர்ற அத்தனை சீனும் வயிறு புண்ணாகிடுது. வசனமும் பாடல்களும் ரொம்ப அற்புதமா இருக்கு. தயவு பண்ணி இந்தப் படத்தைக் குடும்பத்தோட பாருங்க. இந்தப் படத்தைப் பார்த்தீங்கன்னா, அப்புறம் கையில சாப்பாட்டை எடுக்கிறப்ப எல்லாம் அதை ரொம்ப மரியாதையா பெருமையா பார்ப்பீங்க. நமக்காக எங்கோ வயல்காட்டுல கஷ்டப்படுறவங்களை மனசுக்குள்ள நினைச்சுப் பார்ப்பீங்க. அவசியம்'கத்துக்குட்டி' பாருங்க..." 
 
நடிகர் விமல்:
 
‘கத்துக்குட்டி’ படம் ரொம்ப பிரமாதமா இருக்கு, நல்ல கருத்துக்களை நகைச்சுவையோட சொல்லியிருக்காங்க. இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குனர் இரா. சரவணன் இயக்கி இருக்கிறார்,ஆனா அவர் புதுமுக இயக்குனர் போல தெரியல, பல படங்களை இயக்கின அனுபவம் உடையவர் போல உருவாக்கியிருக்கிறார். மீத்தேன் பிரச்சனையை மிக நாசுக்காகவும், தெளிவாகவும் சொல்லியிருக்காங்க, தஞ்சை மண்ணின் வாழ்வியல் பதிவுகள் ரொம்ப அழகா பண்ணியிருக்காங்க.

இந்த திரைப்படத்தில் நடித்த நரேன், சூரி, ஸ்ருஷ்டி மற்றும் எல்லா கலைஞர்களும் எதார்த்தமா நடிச்சிருக்காங்க. இது கத்துக்குட்டி இல்ல... கத்துக்குடுக்கிற குட்டி. 100 ரூபாய் பணம் கொடுத்து நாம ஒவ்வொருத்தரும் பார்க்க வேண்டிய படம். குடும்பத்தோட பாருங்க. நிச்சயம் கொண்டாடுவீங்க. தயவு பண்ணி மிஸ் பண்ணிடாதீங்க..."

நடிகர் சூரி:

‘கத்துக்குட்டி’ திரைப்படத்தில நடிச்சது ரொம்ப பெருமையாகவும், சந்தோசமாகவும் இருக்குது எனக்கு. உங்க மனச தொடுகிற முக்கியமான பத்து படங்கள்ள இந்த கத்துக்குட்டியும் இருக்கும்னு நம்புறேன். உங்கள்ள ஒருவனா  சொல்லுறேன் கத்துக்குட்டி மிக அற்புதமான படம். நிச்சயமா தியேட்டர்ல போயி பாருங்க.
 
இயக்குநர் பொன்ராம்:

‘கத்துக்குட்டி’ சூப்பர் எண்டர்டைமன்ட் படம், முதல் பகுதியில சூரி அண்ணனும், நரேனும் கலக்கி இருக்காங்க. அங்கெங்க செம காமெடியா இருக்கு. ஒரு கமர்ஷியல் படத்துக்கான அத்தனையும் இதுல இருக்கு. க்ளைமாக்ஸ் சீன் ரொம்ப சஸ்பென்ஸா இருந்தது. யாராலயும் கணிக்க முடியாத க்ளைமாக்ஸை பிக்ஸ் பண்ணி இயக்குநர் மிரள வைச்சிருக்கார். அருமையான க்ளைமாக்ஸ்,  ரொம்ப என்ஜாய் பண்ணி கைதட்டுற க்ளைமாக்ஸ். இந்த படம் மிக அற்புதமான கருத்துக்கள் உள்ள எண்டர்டைமன்ட் படம்.

இப்படி ஒரு அற்புத படைப்பை வழங்கிய கத்துக்குட்டி குழுவினருக்கு எனது வாழ்த்துகள்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
இவங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ - சிவகார்த்திகேயன், சூரி குறித்து சமந்தா
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
யாரையும் போட்டியாக நினைப்பதில்லை - சிவகார்த்திகேயன்
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
தனது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions